புவியியல் - துணுக்குகள்!

 









ப்ரூசைட்

1824ஆம் ஆண்டு, அமெரிக்க கனிமவியலாளர் ஆர்ச்சிபால்ட் ப்ரூஸ் என்பவரின் பெயர் சூட்டப்பட்ட கனிமம். புரூசைட் என்பது, மெக்னீசியம் ஹைட்ராக்சைடு கலவை. வெள்ளை, பச்சை, பழுப்பு, நீலம் ஆகிய நிறங்களின் கலவையாக இருக்கும். 

காணவேண்டிய குகைகள்

ஆர்டா குகை, ரஷ்யா

கடல் நீருக்கடியில் உள்ள குகை. உலகில் கடல் நீருக்கடியில் அமைந்த நீளமான குகைகளில் இதுவும் ஒன்று. உலகளவில் ஆழ்கடல் நீச்சல்வீரர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம் இதுவே. 

ஹாங் சன் டூங், வியட்நாம்

குகையில் மழைக்காடுகளில் உள்ள மரங்கள் வளர்ந்துள்ளன. உலகில் உருவான இயற்கையான பெரிய குகைகளில் இந்த குகை, முக்கியமானது. மரங்கள் 30 மீட்டர் உயரத்திற்கும் அதிகமாக உயரத்தில் வளர்ந்துள்ளன. 

டாப்சின்ஸ்கா ஐஸ் கேவ், ஸ்லோவேகியா

இந்த குகையில் உள்ள சுவர்கள் எல்லாமே ஐஸால் ஆனவை. 26 மீட்டர் உயரத்திற்கு ஐஸ் உருவாகியுள்ளது. வெளியிலுள்ள காற்று குகையின் வெப்பநிலை மைனஸ் 3.8 டிகிரி செல்சியசாக பாதுகாக்கிறது. 


ஜெயன்ட் காஸ்வே (Gaint causeway)

அயர்லாந்தின் வடக்குப்பகுதியில் ஜெயன்ட் காஸ்வே அமைந்துள்ளது. இங்கு கற்களால் அமைந்த தூண்கள் போன்ற வடிவில் பாறைகள் காணப்படுகின்றன. இங்குள்ள கடற்புரத்தை அடுக்கி வைத்தது போல காணப்படும் கற்கள் அழகாக மாற்றியுள்ளன. இங்குள்ள கற்களின் வடிவமைப்பு கொலும்னார் ஜாய்ன்டிங் எனலாம். எரிமலைக்குழம்பு  வெளியாகி குளிர்ந்து இறுகும்போது இப்படி வடிவமைப்பு உருவாகிறது. 

பல லட்சம் ஆண்டுகளுக்கு எரிமலைகள் வெடிப்பு தீவிரமாக நிகழ்ந்தது. அதில் வெளியான எரிமலைக்குழம்பு பாறைகளை உருக்கியது. கடலை அடைந்த எரிமலைக்குழம்பு,  மெல்ல குளிர்ந்து அப்படியே இறுகின. இதில் ஏற்பட்ட இறுக்கம்தான். கற்களின் வினோதமான வடிவங்களுக்கு காரணம் என புவியியலாளர்கள் கூறுகிறார்கள். 

இங்கு ஒட்டகம், அரக்கனின் கால் என்று கூறப்படும் இரு பாறை வடிவங்கள் உள்ளன.  இங்குள்ள கடற்புரத்திற்கென சில உயிரினங்கள் உள்ளன. வட்டவடிவில் உள்ள மீன் 1.8 மீட்டர் நீளம் கொண்டது. ஹார்பர் சீல் எனும் நீர்நாயை, இங்கு காணலாம். 

டால்பின் குடும்பத்தைச் சேர்ந்த ஆர்கா மீன்களை இங்கு பார்க்கலாம்.  மீன்களையும் ஈல்களையும் பிடித்து தின்னும் கருப்பு கடற்பறவையும் இந்த இடத்தின் முக்கியமான உயிரினம். எட்டு மீட்டர் நீளம் வளரும் பேஸ்கிங் சுறா மீனும் கடல்நீரில் பார்க்கலாம். 


amazing earth book


 






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்