நோய்த்தொற்றை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைவது முக்கியம்! - ரணில் விக்ரமசிங்கே


Sri Lanka's North closer to political solution, says PM ...
tnie



அரசியல்

ரணில் விக்ரமசிங்கே, இலங்கை முன்னாள் பிரதமர்.

தெற்காசியாவில் நோய்த்தொற்று பாதுகாப்பிற்காக நாடுகள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார். அவரிடம் பேசினோம்.

பல்வேறு நாடுகள் நிலப்பரப்பு ரீதியாக ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்கிறீர்கள். அது எப்படி சாத்தியம்?

பெருந்தொற்று பரவிவருகிறது. அனைத்து நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சிறந்த தலைமை கிடைத்திருந்தால் அனைத்து நாடுகளும் இதனை எளிதாக கட்டுப்படுத்தியிருக்க முடியும். சார்க் மாநாட்டில் பல்வேறு நாடுகளும் ஒன்றாக இணைந்து நிற்பது நல்ல நடவடிக்கை. இந்தியாவும் பிற நாடுகளும் தங்களுக்குள் மருத்துவ நடவடிக்கைகள் சார்ந்து உதவிகளைப் பரிமாறிக்கொண்டால் எளிதாக நோய்த்தொற்று விஷயங்களை சமாளிக்க முடியும். மேலும் எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவும். இலங்கையில் சிறப்பான அடிப்படை சுகாதார கட்டமைப்பு உள்ளது. அதேபோல இந்திய மாநிலமான கேரளத்திலும் உள்ளது. இவை இரண்டு பகுதிகளும் தங்களுக்குள் உதவிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டு தங்களுடைய ஒத்துழைப்பை பலப்படுத்தலாம்.

சார்க் நாடுகளுக்கான அவசர நிலை நிதியுதவி மையம்தான் அமைக்கப்பட்டுள்ளதே?

அந்த மையம் அமைந்துள்ளதும் செயல்பாட்டில் உள்ளதும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதான். ஆனால் அது மையமாக இல்லை. அதனை அதற்கென உள்ள செயலர் அணுகலாம். ஆனால் அந்த மையம், பெங்களூருவிலோ அல்லது கொழும்பிலோ அமைந்திருந்தால் நன்றாக இருக்கும். நேபாளத்தின் காத்மாண்டுவில் தற்போது செயல்பட்டு வருகிறது. அப்படி இருப்பது உதவிகளை கிடைப்பதை தாமதப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

சார்க் அமைப்பின் நிதி நிர்வாகம் பற்றி பாகிஸ்தான் ஆட்சேபனைகளை தெரிவித்து இருந்ததே?

யாராவது ஒருவர் நிதியைக் கையாளும் பொறுப்பை ஏற்றுத்தானே ஆகவேண்டும். இந்தியா அளிக்கும் நிதியின் அளவு பாகிஸ்தான் அளிக்கி முடியாது. இந்தியா சார்க் கூட்டமைப்பு வழிநடத்திச் செல்ல முடியும். அவர்களுக்கு அதில் விருப்பமின்மை இருந்தால் வேறு நாடுகளும் கூட இதில் இணைந்துகொள்ளலாம். சார்க் தலைமையகத்திற்கு அதனை அவர்கள் முறையாக தெரிவிக்கவேண்டும். இந்தியா குறிப்பிட்ட தொகையை வழங்கினால் அதேபோல பிற நாடுகளும் நிதியை வழங்க வேண்டும். இது இப்போதைய நிலைக்கானது மட்டுமல்ல, நாடுகளின் எதிர்கால பொருளாதாரம் சார்ந்தும் யோசிக்கவேண்டியது இருக்கிறது.

உலக வங்கியின் மூத்த பொருளாதார வல்லுநர், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கான உணவுபாதுகாப்பை நாடுகள் உறுதி செய்யவேண்டுமென கூறியிருந்தார். நீங்கள் அதனை ஏற்கிறீர்களா?

இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள் பல்வேறு நாடுகளின் வளமாக உள்ளனர். நான் அவர் கூறிய கருத்தை ஏற்கிறேன். அவர்கள் நோய்வாய்ப்பட்டு அல்லது வேலை செய்ய முடியாமல் போனால் ஒட்டுமொத்த தொழில்துறையும் இயங்குவது கடினமாகிவிடும். சார்க் நாடுகளிலுள்ள நிறுவனங்கள் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை தயாரித்து வழங்கலாம். இதன்மூலம் சந்தையில் குறிப்பிட்ட நிறுவனங்களே கோலோச்சிய தன்மை ஒழியும்.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவது கடினமான ஒன்றுதானே? இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய ஊர்களுக்கு சென்றுவிட்டு திரும்பவில்லை எனில் தொழில்துறை என்னவாகும்?

இப்போது இலங்கை, மாலத்தீவு, நேபாளம், இந்தியாவில சில பகுதிகளில் சுற்றுலா வருவாய் குறைந்துவிட்டது. விவசாயத்தை நவீனமயமாக்கினால் அதில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஹெலிகாப்டர் மணி மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிக்க முடியும். வெளிநாடுகளில் வாங்கிய கடன் பத்திரங்களில் முடங்கிய பணமதிப்புதான் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.

பெருந்தொற்று பாதிப்பால் சீனாவும் அமெரிக்காவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று நினைக்கிறீர்கள்?

ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுளன. அமெரிக்க அதிபர் உள்நாட்டு நோய்த்த்தொற்றை தடுக்க முடியாமல் சீனாவை புகார் சொல்லிக் கொண்டிருக்கிறார். சீனா வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கிவிட்டது. ஊரடங்கு காலத்தை வெற்றிகரமாக கடந்துவிட்டது. ஆனால் அதன் சந்தை முன்னைப்போல இருக்கும் என்று கூறமுடியாது. காரணம் சீனாவின் முக்கியச் சந்தை மேற்குலகுதான். அவர்கள் அப்பொருட்களை ஏற்கவில்லையென்றால் என்ன செய்வது?

இந்தியா ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இணைவது பற்றிய முடிவை எடுப்பது காலத்தின் கட்டாயம்.

நன்றி: இந்து ஆங்கிலம்,

ஆங்கிலத்தில்: மீரா சீனிவாசன்

கருத்துகள்