மாநிலங்களை மதித்து மத்திய அரசு நடந்துகொள்ளவில்லை!
the hindu |
சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்
ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு மாநில அரசு மாநில அரசுகளுக்கு அதிகளவில் நிதியுதவி செய்யவேண்டும். நிதியைப் பெறுவதில் மாநிலங்களுக்கு சுதந்திரம் அளிக்கவேண்டும் என்கிறார் சீதாராம் யெச்சூரி. அவரிடம் பேசினோம்.
ஊரடங்கு காலம் சிக்கலான காலமாக உள்ளது. இக்காலம் நீட்டிக்கப்படும்போது பொருளாதாரம் எப்படி பாதிக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறீர்கள்?
பிரதமர் மாநில அரசுகளும் மக்களும் கோவிட் -19 தொற்றை எதிர்கொள்ள அளித்தது நான்கு மணிநேரம் மட்டுமே. அரசிடம் ஊரடங்கை எப்படி அமல்படுத்தபோகிறோம், பாதிக்கப்பட்டவர்களை எப்படி சோதிக்கப்போகிறோம் என்பது பற்றிய திட்டமிடல் இல்லை. இதனால் ஊரடங்கு காலத்திற்கு முன்னரும், அதன் பின்னரும் மக்கள்தான் அதிகளவு பாதிக்கப்பட்டனர். இப்போது சமூக தனிமைப்படுதல் என்பதை பலரும் பின்பற்றச்சொன்னாலும் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு காலத்தில் நோய்த்தொற்றை தடுத்திருந்தால், விதிகளை மெல்ல தளர்த்திக்கொண்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவியிருக்கலாம்.
மாநில முதல்வர்களோடு பிரதம் மோடி வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பேசினார். அதுபற்றி உங்களது கருத்து?
அவர் ஒன்பது மாநில முதல்வர்களோடு பேசினார். அதில் ஒருவர் ஒடிஷா முதல்வர், மற்றொருவர் புதுச்சேரி முதல்வர். இவர்களைத் தவிர பிறர் அனைவருமே பாஜக கட்சியைச்சேர்ந்த முதல்வர்கள். பிரதமர் இவர்களோடு பேசப்போகிறோம் என்று முன்னரே முடிவு செய்து சந்திப்புகளை ஏற்பாடு செய்வது போல உள்ளது. இதனால் ஊரடங்கை நீட்டிக்கவேண்டும் என்று ஒன்பது பேரில் நான்கு பேர் சொன்னால் கூட அந்த முடிவை மத்திய அரசு அமல்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. இந்த சந்திப்புகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கிறது சந்தேகத்தை அளிக்கிறது.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், கேரள மாநிலம் ஊரடங்கு விதிகளை தளர்த்தியபோது அதனை தளர்த்த கூடாது என்று கடிதம் எழுதி எச்சரித்தது. மேலும் பாஜக கட்சி அல்லாத பிற கட்சி முதல்வர்கள் ஆளும் மாநிலங்களுக்கு மத்தியக்குழு அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கு என்ன அர்த்தம்?
மத்திய அரசு, மாநிலங்களை தன்னுடைய ஒரு பகுதியாக கருதவில்லை. ஜிஎஸடி முறையில் கிடைத்த வரி வருவாயை மாநிலங்களுக்கு அளிக்கவேண்டும். ஆனால் அப்படி அளிக்க மத்திய அரசுக்கு மனம் இல்லை. பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் நிதி சேகரித்தாலும் கூட அதனையும் மாநிலங்களுக்கு வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. அரசு. நிதி ஆதாரம் இல்லாத மாநில அரசுகள் ஊரடங்கை தளர்த்தி பொருளாதார பலம் கிடைத்தால் மட்டுமே பழைய நிலைக்கு மீள முடியும். பாஜக கட்சி முதல்வர்கள் ஆளும் குஜராத், மத்திய பிரதேசத்தில் அதிக நோய்த்தொற்று உள்ள நிலையில், பாஜக கட்சி ஆளாத பிற மாநிலங்களுக்கு மத்தியக்குழுக்களை எதற்கு அனுப்புகிறார்கள்? ஜனவரியில் கேரளத்தில் கோவிட் -19 நோயாளி கண்டறியப்பட்டார். ஆனால் அப்போது மத்திய அரசு அதற்கு எதையும் செய்யவில்லை. மார்ச் 22ஆம் தேதிக்கு மேல் அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. அதுவரை டிரம்பை வரவேற்கும் பணியிலும், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை கலைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தது. கூட்டாட்சி முறையில் நம்பிக்கையின்றி மத்திய அரசு செயல்படுவதால், ஜனநாயகமே ஆபத்திற்குள்ளாகி உள்ளது.
ஜனநாயகம் எப்படி ஆபத்திற்குள்ளாகி இருப்பதாக கூறுகிறீர்கள்?
இந்தியாவில் பெருந்தொற்று ஏற்படும் காலங்களில் பல்வேறு அடக்குமுறை சட்டங்களை அரசு தீட்டும் இந்தியாவில் பிளேக் நோய் வேகமாக பரவியபோதும் அப்படித்தான். இதன் காரணமாக பிளேக் நோய் கமிஷனரான வால்டர் சார்லஸ் ராண்டு என்பவரை சபாகெர் சகோதரர்கள் சுட்டுக்கொன்றனர். அதேபோல பெருந்தொற்றை சரிவர சமாளிக்க முடியாமல் பிரிட்டிஷார் தடுமாறினர் என்று பாலகங்காதர திலகர் பத்திரிகையில் எழுதினார். இதற்காக அவரும் அரசின் கோபத்திற்கு ஆளானார்.
பொருளாதாரத்தை மீட்க உதவும் நடவடிக்கைகளாக நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
இந்திய மக்கள் அனைவருக்கும் 7, 500 ரூபாயை வங்கிக்கணக்குக்கு அரசு வழங்கவேண்டும். மேலும் ரேஷன் கார்டு வழியாக அவர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கவேண்டும். இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது ஊருக்கு செல்ல வழிவகை செய்யவேண்டும். நூறு நாட்கள் வேலைவாய்ப்பை இருநூறு நாட்களாக அதிகரிக்க வேண்டும். மேலும் சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் அதிகளவு முதலீடுகளை செய்யவேண்டும். பெருந்தொற்றுக்கு அரசு அளித்த 1.7 லட்சம் கோடி என்பது குறைவான தொகை. உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதம் அளவுக்கு பிற நாடுகள் செலவழித்து நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர்.
நன்றி: இந்து ஆங்கிலம்
ஆங்கிலத்தில்: சோபனா கே. நாயர்
கருத்துகள்
கருத்துரையிடுக