இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் உழைப்பை மத்திய, மாநில அரசுகள் அங்கீகரிக்கவில்லை! - இருதய ராஜன்


India, Coolie, Labor, Work, Rocks, Construction, Heavy
pixabay

இருதயராஜன், வளர்ச்சி மேம்பாட்டு மையம்

இடம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கையாள்வதில் மத்திய, மாநில அரசுகள் தோற்றுவிட்டதாக எப்படி சொல்லுகிறீர்கள்?

இடம்பெயர்ந்து பல்வேறு மாநிலங்களில் உழைக்கும் தொழிலாளர்களை முக்கியமானவர்களாக மத்திய மாநில அரசுகள் கருதவில்லை. அவர்களை கொள்கை வகுக்கும்போதும் புறக்கணித்தே வந்திருக்கிறார்கள். இதனால்தான் பல்வேறு நகரங்களில் பொருளாதாரத்தில், கலாசார ரீதியாக, தொழில்ரீதியாக பங்களிக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களை ஊரடங்கு காலத்தில் மத்தி அரசு கணக்கில் கொள்ளவில்லை. ஊரடங்கு காலத்திற்கு முன்னரே நான்கு நாட்கள் கொடுத்திருந்தால் அவர்கள் தங்கள் ஊருக்கு சென்றிருக்க முடியும். ஆனால் அப்படி ஒரு செயல்பாடு நடக்கவில்லை. காரணம் அரசுகள் அவர்களை எப்போதும் போல பொருட்படுத்தவில்லை. அவர்கள் இடம்பெயர்ந்து செல்வதன் மூலம் நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதேசமயம் சரியான முறையில் அவர்களை பராமரித்து சோதனை செய்தால் நோய்த்தொற்றை சமாளித்து இருக்கமுடியும். இனி அவர்கள் நகரங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியபிறகு இங்கு வருவது எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. நாம் இச்சமயத்தில் அவர்களுக்கான கொள்கைகளைப் பற்றி பேசவேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம்.

ஊரடங்கு காலத்திற்கு பிறகு தொழிலாளர்கள் திரும்ப நகரங்களுக்கு திரும்ப வாய்ப்புள்ளதா?

தொழிற்சாலைகள் இயல்பு நிலைக்கு மீண்டு உற்பத்தியை தொடங்குவதற்கு ஆறு மாதங்கள் தேவை என்று நினைக்கிறேன். தொழிலாளர்கள் நிலைமை சீராகி போக்குவரத்து வசதிகள் தொடங்கப்பட்டு இயங்கி இங்கு வந்து சேர ஒரு ஆண்டு தேவை. அவர்களுக்கு முறையான நிதி உதவிகளை செய்யாதபோது அவர்கள் திரும்ப தொழில்களுக்கு திரும்புவது கடினம்.

பல்வேறு பருவகாலங்களில் வேலை தேடிச்செல்லும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை என்பது கிராமப்புறம் சார்ந்து அதிகரித்திருக்கிறதா?

இனி தொழிலாளர்களின் சம்பளம், வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். நீண்ட தொலைவிலுள்ள கிராமங்களில் இயல்பு நிலை திரும்ப எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை. சம்பளம், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காக விரிவடையும் பல்வேறு நகரங்களை நோக்கி கிராமப்புற மக்கள் வருவார்கள். இதனை மிகவும் துல்லியமாக கணித்துச் சொல்லமுடியவில்லை. நகரங்களில் இத்துறை சார்ந்த கொள்கைகளை வகுப்பது முக்கியம்.

கேரள மாநிலத்தில் நிலைமை சீராகிவிட்டது. எனவே அங்கு தொழிலாளர்கள் வேகமாக வேலைவாய்ப்புகளுக்காக வருவார்களா?

 பெருந்தொற்று காரணமாக பத்து முதல் பதினைந்து சதவீத தொழிலாளர்கள் தங்களுடைய மாநிலங்களுக்கு சென்றிருக்க கூடும். இவர்கள் திரும்ப சில மாதங்கள் தேவைப்படும். ஊரடங்கு விதியை கேரளம் மாநிலம் தளர்த்தினாலும் கூட அங்கு பொருளாதாரம் வளர்ச்சி பெற ஓராண்டு கூட தேவைப்படலாம். அரசு கொள்கை சார்ந்த நிலையான முடிவுகளை எடுத்தால் மட்டுமே தொழிலாளர்கள் திரும்ப தம் வேலைவாய்ப்புகளைப் பெற முடியும்.

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்ய செல்லும் நாடுகள் மாற வாய்ப்பிருக்கிறதா?

வளைகுடா போன்ற நாடுகளுக்கு சென்று வந்தவர் இனி கனடா, இங்கிலாந்து என்று செல்ல வாய்ப்புள்ளது. கனவு தேசம் என்று அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்தவர்கள் இனி அந்நாட்டிற்கு செல்வது கடினமாகவே இருக்கும். அமெரிக்காவில் பெருந்தொற்று சார்ந்த பிரச்னையில் அவர்கள் எடுத்த நடவடிக்கை அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவில்லை என்பது முக்கியக் காரணம் ஆகும்.

முறைப்படுத்தப்படாத துறைகள் இச்சிக்கலிலிருந்து மீள முடியுமா?

இத்துறைகளுக்கு மத்திய அரசு பொருளாதார உதவிகளை அளிப்பது அவசியம். அனைத்து துறைகளும் ஒன்றாக இணைந்து தங்கள் துறைசார்ந இழப்புகளை மத்திய அரசுக்கு அறிக்கை வழியாக தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் கடன் உதவிகளைப் பெற முடியும். வரி விலக்கு, பணப்பரிமாற்ற உதவிகள் மற்றும் பிற உதவிகள் மேற்சொன்ன வழியாகவே பெற முடியும்.

கேரள அரசு இடம்பெய்ர்ந்த தொழிலாளர்களை சிறப்பாக மேலாண்மை செய்துள்ளது. இதன் வழி, பிற மாநிலங்கள் அறிய வேண்டிய பின்பற்றவேண்டிய விஷயங்கள் என்ன?

அம்மாநில அரசு தங்களுடைய மாநில வளர்ச்சிக்கு இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் உதவுகிறார்கள் என்பதை அங்கீகரித்து பாராட்டி அவர்களுக்கு உதவிகளை செய்திருக்கிறார்கள். மாநில அரசு வேகமாக கொள்கைகளை மாற்றிக்கொண்டு மாவட்ட நிர்வாகம், ஊரக நிர்வாகம் மூலம் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான உணவு, உடை, இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். இது பாராட்டப்படவேண்டிய அம்சம். வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களையும் அழைத்து வரவும். அவர்களுக்கு இங்கு தொழில் தொடங்க உதவிகளைச் செய்யவும் அரசு முன்வந்திருக்கிறது

நன்றி: டைம்ஸ் ஆப இந்தியா, மே.3,2020

ஆங்கிலத்தில்: ஆதித்யா சீனிவாசன்

கருத்துகள்