நினைவுகளை இழந்த காதலிக்கு தன் காதலைச் சொல்லும் காதலன் கதை - தேஜ் ஐ லவ் யூ
teleangana today |
சாய்தரம் தேஜின் படம் என நம்பிக்கையாக பார்க்கத் தொடங்கினால் படம் எங்கு சென்று முடிகிறதே என்று தெரியாமல் ஒருவழியாக காதல் படமாக மாறி நெகிழ்ச்சி ஏற்படுத்த முயன்று தோற்கிறது.
தேஜின் பெற்றோர் இறந்துவிட, அவரது தாய் மாமன் அவரை வளர்த்து வருகிறார். ஒருநாள் இரவில் சைக்கிளில் வரும்போது பெண்மணி ஒருவரை ஏற்றிச்செல்கிறான். அவர் அவசரமாக ரயில்வே நிலையத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் போகும் வழியில் அப்பெண்ணை இருவர் பலாத்காரம் செய்ய முயல், தேஜ் பாறாங்கல்லை அந்த காம பிசாசுகளில் ஒருவர் மீது போட , அவரின் ஆவி அந்த நொடியே பரலோகம் செல்கிறது. தேஜை போலீஸ் பிடித்து ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கின்றனர்.
பலாத்காரத்திலிருந்து தப்பிய அம்மணி தன் கணவரை அந்த சிறுவனைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லிவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விடுகிறார். கணவர் சுயநல சுனாமி. மனைவி கொடுத்த காசை வைத்துக்கொண்டு சுகமாக இருக்கிறார். இங்கு பார்த்தால் தேஜின் குடும்பமே அவரின் மீது வழுக்கிவிடும் அளவுக்கு பாசமாக இருக்கிறார்கள். இதனால் தேஜ் எப்படியிருக்கிறார் என்று சிறைத்தூணில் இருந்து எட்டிப்பார்த்து தன் அன்பைக் காட்டுகிறார் அவரின் தாய்மாமா.
சிறையிலிருந்து வெளிவந்த எஃப் இசட் பைக்கில் ஜாலியாக சுற்றி வருகிறார். அவருக்கு கல்லூரியில் அரியர் மேல் அரியர் வந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அப்படி சுற்றும் போது மாமன் மகளை கிண்டல் செய்யும் பெண்ணை மிரட்டப் போகிறார். ஆம். அங்குதான் அனுபமாவைச் சந்திக்கிறார். இருவருக்குமான காதல் மோதல் காட்சிகளெல்லாம் முடிந்து ஒருவழியாக அனுபமா தன் காதலைச்சொல்லும் போது அவருக்கு விபத்து நேருகிறது. காதல் நினைவுகள் மட்டும் நடராஜ் ரப்பர் வைத்து அழித்தது போல காணாமல் போகிறது. அனுபமாவுக்கு தன் காதலை உணர்த்தி, அவரின் அப்பாவின் சுயநல சுண்ணாம்பு எண்ணங்களை புரிய வைத்து தன் காதலை தேஜ் சொன்னால் படம் முடிந்துவிடும்.
ஆஹா
தேஜ் படத்தில் ஓரளவு நடிக்க முயன்றிருக்கிறார். அவர் உதட்டைக் கடிக்கும் காட்சிகள் சகிக்கவில்லை. அனுபமா அவரது பங்குக்கு பொம்மை போல அறிமுகமாகி பின்னர் நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார். படத்தின் கதை, திரைக்கதை எங்கு செல்கிறதென்றே தெரியவில்லை. இதனால் அனைத்து நடிகர்களின் நடிப்பும் வீணாய் போகிறது. குடும்பத்தினர் தேஜ் மீது பாசம் மட்டுமே வைத்திருக்கின்றனர். ஆனால் நம்பிக்கை வைக்கவில்லை என்பது பலவீனமான விஷயமாக இருக்கிறது.
ஐயையோ
கல்லூரி காமெடிகள், காதல் காட்சிகள் எதிலும் இயல்பான தன்மை இல்லை. உறவுகளிடம் இனிமையாக பேசி பழகுபவன் தான் காதலித்த பெண்ணுக்கு நினைவுகள் இல்லாத போதும் எதற்கு நாடகம் போட்டு காதலை சொல்ல முயற்சிக்க வேண்டும். இயல்பாக பேசி காதலைச் சொல்ல முடியுமே? அவர்கள் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்றிருக்கிறார்கள். புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என லாஜிக்காக நிறைய விஷயங்கள் உண்டு. அவர்கள் காதலிப்பதை தெரிந்துகொண்ட நண்பர்கள் கூட இருப்பார்களே?
காதலைச் சொல்ல அதிக நேரம் எடுத்துக்கொண்டு விட்டார்கள்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக