அறிவியல் ஆய்வுகளில் இந்தியா முன்னேறி வருகிறது!


Coronavirus, Mask, Infection, Virus, Disease
pixabay



கோவிட் நோய்த்தொற்று இந்தியாவின் அறிவியல் நிலையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது

அசுதோஷ் சர்மா, செயலர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை.

நோய்த்தொற்றைத் தடுப்பதில் அரசும் தனியார் நிறுவனங்கள் எப்படி செயல்பட்டு வருகின்றன?

அறிவியல் ஆய்வகங்கள், ஆராய்ச்சி, ஸ்டார்ட்அப், கல்வி நிலையங்கள் என தனியார் துறை நமக்கு பெரும் பங்காற்றி வருகிறது. அரசு இவர்களுக்கு பல்வேறு மானிய சலுகைகளோடு கொள்கைகளையும் சாதகமாக வகுத்து வருகிறது. இதன்காரணமாக புதிய ஆராய்ச்சி சிந்தனை கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்தியா பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் எந்த விஷயங்களில் பின்தங்கியுள்ளதாக நினைக்கிறீர்கள்?

நம் நாடு பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆராய்ச்சியில் பின்தங்கியுள்ளதை நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள். நான் அதனை அப்படி பார்க்கவில்லை. பிற நாடுகளில் அறிவியல் தொழில்நுட்பங்களை வேகமாக வணிகமயப்படுத்தி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருகிறார்கள். நம் நாட்டில் இச்செயல்பாட்டில் வேகம் குறைவு. அறிவியல் ஆய்வுகளை தொடர்ச்சியாக செய்வதற்கு நாம் உந்துதல் தந்தால் மட்டுமே நம்மால் அவற்றை வணிகமயப்படுத்த முடியும். நமக்கு கல்விச்செல்வத்தை தரும் சரஸ்வதி போலவே செல்வத்தை தரும் லஷ்மியும் முக்கியம்தான். பெருந்தொற்று காலகட்டம் நமக்கு தெளிவாக இதையே உணர்த்தியுள்ளது.

இந்தியாவின் அறிவியல்துறை இச்சவால்களை எதிர்கொண்டு மீண்டு எழுமா?

இந்தியர்களுடைய அறிவியல் அறிவு ஆழமானது. அதற்கான மிகச்சிறந்ந கட்டமைப்பு கொண்டுள்ளது. இன்று உலகில் பொறியியல் மற்றும் அறிவியல் சார்ந்த நூல்களின் பதிப்பில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. நானோ அறிவியல் சார்ந்த ஆய்வுகளிலும், பொருளியல் அறிவியலிலும் நாம் மூன்றாவது இடத்தில் உள்ளோம். அறிவியல் துறையில் சில இடங்களில் நாம் மேம்படுத்த வேண்டியுள்ளது அவ்வளவுதான்.  நமது அறிவியல் துறை, கோவிட் -19 நோய்த்தொற்றை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. மாஸ்க், சானிடைசர்ஸ், விலை குறைவான வெண்டிலேட்டர்கள் பலவற்றையும் குறுகிய காலத்திற்குள் உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறோம். மாற்று சிகிச்சையான பிளாஸ்மா தெரபியை அவசர நிலையிலுள்ளவர்களுக்கு சோதனை முறையில் சோதித்துவருகிறோம். குறைந்த விலையில் ஒருவரின் உடலிலுள்ள நோய்த்தொற்றைக் கண்டுபிடிக்கும் முறையை கடந்த மாதம் நம் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்திய அறிவியலாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் பெருந்தொற்று காலத்தில் வேகமாக செயல்பாட்டு நோயைத் தடுக்கும் முயற்சியில் உள்ளனர்.

பெருந்தொற்றைக் கண்டுபிடிக்கும் செயல்பாட்டில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

கோவிட் தொற்றுக்கு தடுப்பூசி மருந்துகள் கிடையாது. எனவே நோய்த்தொற்றை தடுத்து அதன் பரவல் வேகத்தை தடுப்பதிலேயே தற்போது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறோம். இதன் விளைவாக, விலைகுறைந்த சாதனங்களை உருவாக்கி அதன் மூலம் நோய்த்தொற்றை கண்டறியவும், அதன் தொடர்புசங்கிலியைத் துண்டிக்கவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, மே 1, 2020

ஆங்கிலத்தில்: சேட்டன் குமார்

கருத்துகள்