குற்றச்சாட்டுகளை பூமாரி போல எதிர்கொண்ட ஹூவாய் நிறுவனர் ரென் - பூக்களின் மத்தியில் ஒரு கோப்பை திராட்சை ரசம் மின்னூல் வெளியீடு

 

 

அமெரிக்க அரசால் தேச துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனம்தான். ஆனால் அதன் வெற்றி என்பது எளிதாக வரவில்லை. அதன் நிர்வாக கொள்கைகளை வகுத்தவர், ரென். நிறுவனத்தின் ஆன்மிகத் தலைவரும் அவர்தான். எப்படி ஜெயித்தார் என்பதை பல்வேறு சம்பவங்களை விளக்கி சற்று எளிமையான முறையில் சுருக்கமாக சொல்லும் நூல்தான் இது. வளவளவென சுற்றி வளைக்காமல் என்ன விஷயமோ அதைப்பற்றி மட்டுமே கவனப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இதனால் போனில், டேபில் படித்தாலும் வேகமாக வாசிக்க முடியும். இது தொழில்நுட்ப ரீதியான சாதக அம்சம். இதைத்தாண்டி ரென் எப்படி ஹூவாவெய் நிறுவனத்தை கட்டமைத்தார். பன்னாட்டு உலக நிறுவனமாக அதை மாற்றினார் என்பதுதான் நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம். 

ஆசியாவில் தொழில்நுட்ப ரீதியாக ஒரு நிறுவனம் வெற்றி பெறுவது எளிதல்ல. இன்றும் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் அதிக விலை கொண்ட ஆப்பிளுக்கு நிகரான தரத்தைக் கொண்டுள்ளன. இப்படியொரு வளர்ச்சி எப்படி சீனத்துக்கு சாத்தியமானது என்பதையும் ரென் நூலில் கூறியுள்ளார். இப்படி ஆசியாவில் உள்ள இந்தியாவுக்கு அண்டை நாடான சீனாவை புரிந்துகொள்வதன் மூலம் நான் முன்னேற வேண்டிய பாதை தெரியும். எதிரியிடம் கூட நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் உண்டு.  அப்படி கற்றால்தான் இன்றைய உலகமயமாக்க உலகில் நாம் முன்னேற முடியும். அதற்கான வழியை ரென் நமக்கு காட்டுவார்.

 

 

 

 

நூலை அமேஸானில் தரவிறக்கி படிக்க....


https://www.amazon.in/dp/B0B6T4M8WL

 

புத்தக வடிவமைப்பு உதவி - ஜோகோ டாக்ஸ், லிப்ரே ஆபீஸ் 

அட்டைப்பட வடிவமைப்பு - கான்வா.காம்

 

கருத்துகள்