முதன்முதலாக பிரெஞ்சு அரசு இறுதிச்சடங்கு செய்த அறிவியலாளர்! - கிளாட் பெர்னார்ட்
கிளாட் பெர்னார்ட் ( Claude Bernard
, 1813-1878)
பிரான்ஸ் நாட்டின், செயின்ட் ஜூலியன் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர், பியர் பெர்னார்ட் - ஜீன் சால்னியர். 1834 -1843 வரையிலான காலகட்டத்தில் பாரிஸ் சென்று மருத்துவம் கற்றார்.
1847ஆம் ஆண்டு, டி பிரான்ஸ் கல்லூரியின் மருத்துவ பேராசிரியரான பிரான்கோய்ஸ் மாகன்டெயிடம், பணிக்குச் சேர்ந்தார். பெர்னார்ட், பல்வேறு சோதனைகளை செய்து பார்த்த மாகன்டெய்யிடம்தான், மருத்துவத்தை அனுபவரீதியாகப் பயின்றார்.
தன் வழிகாட்டியான மாகன்டெய் மறைவிற்குப் பிறகு, கல்லூரியில் பேராசிரியரானார். 1864ஆம் ஆண்டு, அன்றைய பேரரசர் மூன்றாம் நெப்போலியன், பெர்னார்டிற்கென இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் ஆய்வகம் ஒன்றை உருவாக்கித் தந்தார்.
விலங்குகளின் மீது பல்வேறு சோதனைகளை பெர்னார்ட் செய்து வந்தார். 1878ஆம் ஆண்டு பெர்னார்ட் மறைந்தார். இவரது கணையம், கல்லீரல், வாஸ்மோட்டார் அமைப்பு பற்றிய ஆராய்ச்சிகள் முக்கியமானவை. விஞ்ஞானியான பெர்னார்ட்டின் இறுதிச்சடங்கை பிரெஞ்சு அரசு முதன்முறையாக பொறுப்பெடுத்து நடத்தி கௌரவித்தது.
https://www.famousscientists.org/claude-bernard/
https://www.encyclopedia.com/people/medicine/medicine-biographies/claude-bernard
கருத்துகள்
கருத்துரையிடுக