ஜெர்ம் பிளாசம் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர்! - ஆகஸ்ட் வெய்ஸ்மன்

 











ஆகஸ்ட் வெய்ஸ்மன் (August weismann 1834-1914)


நான், ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் நகரில் பிறந்தேன். கோட்டிங்கென்  பல்கலைக்கழகத்தில் மருத்துவப்படிப்பை நிறைவு செய்து, மருத்துவராக பணியாற்றி வந்தேன். அப்போது சார்லஸ் டார்வினின் உயிரினங்களின் தோற்றம் நூலைப் படித்தேன்.  பரிணாம வளர்ச்சி பற்றிய ஆர்வம் தொற்றிக்கொள்ள , ஜிசன் பல்கலைக்கழகத்தில் பூச்சிகளின் வளர்ச்சி மேம்பாடு பற்றிய ஆய்வுகளைச் செய்யத் தொடங்கினேன்.

1863ஆம் ஆண்டு வெய்ஸ்மன், ஃபிரெய்பர்க் பல்கலைக்கழகத்தில்  விலங்கியல் பாடங்களை கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். இவரின் தூண்டுதலால், அங்கு விலங்கியல் கழகமும், அருங்காட்சியகமும் உருவாக்கப்பட்டன. அதன் தலைவர் வேறு யார், வெய்ஸ்மன் தான். 

தலைமுறையாக தொடரும் பாரம்பரிய பண்புகளின் தொடர்ச்சி பற்றிய ஜெர்ம் பிளாசம் கோட்பாட்டைக் ( germ plasm) கண்டறிந்தார். 

தன் வாழ்வின் இறுதிவரை டார்வினின் இயற்கைத் தேர்வு கோட்பாடு பற்றிய கருத்துக்கு உறுதியான ஆதரவாளராக இருந்தார். 

பிரபல உயிரியலாளரான  எர்னஸ்ட் மேயர், ஆகஸ்ட் வெய்ஸ்மன் உயிரியல் துறையில் பரிணாம வளர்ச்சி பற்றி பேசிய முக்கியமான ஆளுமை என்று கூறியுள்ளார். 


https://en.wikipedia.org/wiki/August_Weismann

https://www.encyclopedia.com/people/science-and-technology/genetics-and-genetic-engineering-biographies/august-weismann

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்