நுண்ணுயிரிகளிடமிருந்து மனிதர்களைக் காப்பாற்றும் ஆன்டிபயாடிக்!

 









நோய்களின் அரண் - முறிமருந்து(Antibiotic)

நமது இயற்கைச்சூழலில் ஏராளமான நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. நமது உடலிலும் கூட வாழ்கின்றன. ஒருவருக்கு நிம்மோனியா எனும் காய்ச்சல் ஏற்பட பாக்டீரியா எனும் நுண்ணுயிரிகளே முக்கியக் காரணம். நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளை தடுக்க முதலில் மருத்துவர்கள் தடுமாறினர். பிறகுதான், நோய்க்கு காரணமான நுண்ணுயிரிகளை தடுக்கும்  வேறுவகை நுண்ணுயிரிகள் உண்டு என்பதை கண்டறிந்தனர். இப்படி சிலவகை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளிடமிருந்து பெறும் வேதிப்பொருட்களை ஆன்டிபயாடிக்காக (முறி மருந்து) பயன்படுத்தினர்.  இந்த கண்டுபிடிப்பு மூலம் தீர்க்கவே முடியாது என கருதப்பட்ட பாக்டீரியா தொடர்பான நோய்களை எளிதாக  குணமாக்க முடிந்தது. தற்போது தயாரிக்கப்படும் முறிமருந்துகளுக்கு, ஆதாரமாக ஸ்ட்ரெப்டோமைசிஸ் (Streptomyces) எனும் பாக்டீரியாக்களை பயன்படுத்துகின்றனர். இந்த பாக்டீரியா, பெரும் காலனியாக வளர்ந்து பெருகுகிறது. 

பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்த முறிமருந்துகளை நெடுங்காலமாக மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, நோய் உண்டாக்கும் பாக்டீரியங்கள் மெல்ல வலுப்பெற்று வருகின்றன. ஸ்டேபிலோகாக்கஸ் ஆரஸ் (Staphylococcus aures) எனும் பாக்டீரியா, மனிதர்களைத் தாக்கி கடுமையான தொற்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை தற்போது கட்டுப்படுத்தும் முறி மருந்து கிடையாது. 

பூமியில் உள்ள பாக்டீரியாக்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவையே மனிதர்களுக்கு நோய்களை ஏற்படுத்துகின்றன. 


Super science Encyclopedia


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்