ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்ட பசுமைச் சுவர்!
ஆப்பிரிக்காவின் பசுமைச்சுவர்!
ஆப்பிரிக்காவில் கிரேட் கிரீன் வால் (Great green wall) என்ற திட்டத்தின்படி மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இத்திட்டப்படி, 8 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு மரக்கன்றுகளை நட்டு சகாரா பாலைவனம் அதிகரிப்பதை தடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன்மூலம் வடக்குப்பகுதி ஆப்பிரிக்காவின் தன்மையை மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
2030க்குள் மரக்கன்றுகளை முழுமையாக நடுவது திட்டம். இதன்மூலம், சாஹேல் எனும் அப்பகுதியில் மழைபொழிவு கூடி, வெப்பம் குறையும் என சூழலியலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு, டிசம்பரில் அமெரிக்க புவி இயற்பியல் மாநாடு நடைபெற்றது. இதில், எதிர்காலத்தில் பாலைவனங்களில் வெப்பம் அதிகரிக்கும் என கூறப்பட்டது. பசுமை சுவர் திட்டம், வெப்பத்தை எளிதில் எதிர்கொள்ள உதவும்.
சகாராவை பசுமையாக்கும் திட்டம், மேற்கு ஆப்பிரிக்க பருவகாலங்களில் மாறுதல்களை ஏற்படுத்தும் என சூழல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். வடக்கு ஆப்பிரிக்காவில் குளிர் தொடங்கும் மாதங்களில் வெப்பமான வறண்ட காற்று வீசுகிறது. வடகிழக்கு பகுதியில் இக்காலத்தில் ஈரப்பதமான காற்று வீசுகிறது. ”சூரியனின் கதிர்வீச்சு இந்த நிலப்பரப்பை தீவிரமாக பாதிக்கிறது. இதுபற்றிய முழுமையான ஆய்வுகள் இல்லை. எனவே, இதனை புரிந்துகொள்வது எளிதல்ல ” என்றார் கியூபெக் மான்ட்ரியல் பல்கலைக்கழக சூழலியலாளர் ஃபிரான்சிஸ்கோ பௌசாடா.
மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதால், சூழலில் தூசுகள் குறையும். இவை வளிமண்டலத்தில் அதிகரித்தால் சூரிய ஒளியை அதிகம் பிரதிபலிக்கும். இதன் விளைவாக வெப்பம் அதிகரிக்கும். மரங்கள், தான் நிலைபெற்றுள்ள மண்ணின் நிறத்தையும் இயல்பையும் மாற்றும். அதிகவெப்பத்தை தாங்கும்படி மண் மாறுவதோடு, ஈரப்பதமான சூழலையும் உருவாக்கிறது.
ஆப்பிரிக்க பசுமைச்சுவர் என்ற திட்டம், 1970களில் உருவாகிவிட்டது. தொடக்கத்தில் வளமான நிலப்பரப்பாக இருந்த சகாரா, இப்போது பாலை நிலமாகிவிட்டது. அதை மீண்டும் வளமாக மாற்றவே, பசுமைச்சுவர் திட்டம்.
1978ஆம் ஆண்டு முதல்முறையாக சீன அரசு, கோபி பாலைவனம் என்ற இடத்தில் நிலத்தின் தன்மையை மாற்ற பசுமைச் சுவர் திட்டத்தைச் செயல்படுத்தி வெற்றிகண்டது. அதன் விளைவாக, ஆப்பிரிக்காவில் 2007இல் பசுமைச்சுவர் திட்டம் தொடங்கியது. தற்போது, இத்திட்டம் 15 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பசுமைச்சுவர் திட்டத்தை ஆப்பிரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகளும் இணைந்து ஆப்பிரிக்க யூனியன் என்ற அமைப்பு தொடங்கி செயல்படுத்திவருகின்றன.
2002ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு நலத்திட்டங்களை செய்து வருகிறது. பசுமைச்சுவர் செனகல் முதல் டிஜிபௌடி வரை அமைக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.
Science news
How africa great green wall could alter climate
(Carolyn gramling)
https://au.int/en/overview
கருத்துகள்
கருத்துரையிடுக