சூழல் சொற்கள்! - அறிய வேண்டிய ஆங்கிலச் சொற்களும், அதன் பொருளும்!
பொருள் அறிவோம்!
Abrupt Climate change
காலநிலையில் உடனடியாக நடைபெறும் மாற்றம் அல்லது விளைவு
Adaptation
புதிய மாறிவரும் இயற்கை சூழல் அமைப்புகளுக்கு ஏற்ற வகையில் வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்வது
Adaptive Capacity
எதிர்கால காலநிலை மாற்றத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் திறன். இத்திறன் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பொறுத்தது.
Aerosols
வளிமண்டலத்தில் உள்ள சிறு துகள்கள் அல்லது நீர் திவலைகள். இவை சூரிய வெப்பத்தை ஈர்க்கின்றன. எடு.கடல் உப்பு, எரிமலை சாம்பல், தூசி
Afforestation
காடுகள் இல்லாத இடங்களில் மரக்கன்றுகளை நட்டு காடுகளை உருவாக்கி வளர்ப்பது
https://19january2017snapshot.epa.gov/climatechange/glossary-climate-change-terms_.html
கருத்துகள்
கருத்துரையிடுக