புகைப்பிடிப்பதை கைவிடுவது எப்படி?
புகைப்பிடிக்காதீர்!
மேலே சொன்னது போல அரசு அல்லது தனிநபர் என யார் சொன்னாலும் சங்கடம்தான். ஆனால் புகைப்பிடிப்பது பிரச்னை என அதை பின்பற்றுபவர் நினைத்து கைவிட்டால் தான் உண்டு. இப்போது இதுதொடர்பான விஷயங்களைப் பார்ப்போம்.
இந்தியாவில் புகைப்பிடிப்பதை கைவிட நினைப்போரின் அளவு 55 சதவீதம். அதில், சரியான ஆதரவு கிடைக்காமல் புகைப்பிடிப்பதை பலரும் கைவிட முடியாமல் தவிக்கின்றனர். 4 சதவீதம் பேர் தான் மனவலிமையால் புகைப்பிடிப்பதை கைவிட்டு அதன் பக்கவிளைவுகளை எதிர்கொண்டு வெல்கின்றனர்.
புகையிலை தொடர்பாக ஏற்படும் நோய்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு 27.5 பில்லியன் டாலர்கள்
புகையிலை பயன்படுத்தி உயிரிழப்போரின் எண்ணிக்கை 1.2 மில்லியனாகும். ஏழு சதவீதம் என்று கூறலாம்.
பெருந்தொற்று காலத்தில் மூன்றில் இருவர் அதாவது புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடிப்பதை கைவிட முயன்றிருக்கின்றனர். இத்தகவலை ஸ்மோக் ஃப்ரீ வேர்ல்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.
அறிவியல் என்ன சொல்கிறது?
நிக்கோடின் ரீப்ளேஸ்மென்ட் தெரபி, கௌன்சிலிங், வெரெனிகிலின், பூபுரோப்லான் என இரு மருந்துகளை மருத்துவர்கள் பயன்படுத்தி புகைப்பிடிப்பவர்களை காப்பாற்ற முயல்கிறார்கள்.
ஸ்வீட் எடு கொண்டாடு என புகைப்பிடிப்பதை நிறுத்தும் நாட்களை நாமே கொண்டாடி மகிழ வேண்டியதுதான். இதற்கு யார் ஒருவருக்கு ட்ரீட் கொடுப்பார்கள். எங்காவது ரிசார்ட் அல்லது தீவுக்கு செல்வது, பீச்சுக்கு செல்வது, இறைச்சியை நல்ல உணவகம் பார்த்து சாப்பிடுவது என ஏதாவது செய்துகொள்ளலாம்.
புகைப்பிடிக்கும் எண்ணம் உருவானால் அதை மறக்க வேறு விஷயங்களில் கவனம் செலுத்தலாம். எங்கள் அலுவலக நண்பர் புகைப்பிடிப்பதை நிறுத்த நிறைய சூயிங்கங்களை வாங்கி வைத்திருந்தார். எவ்வளவு என்றால் ஒரு பாட்டில் நிறைய... அதைச் சாப்பிட்டு அதன் விளைவாக ஏராளமான பிராண சங்கட குசுக்களை வெளியிட்டார். ஆனால் நேரடியான விளைவாக புகைப்பிடிப்பதை இரண்டு ஆண்டுகள் கழித்தே விட முடிந்தது. பேட் கர்மா.
டெய்லர் தைச்ச சட்டை
ரெடிமேட் உடைகளை விட டெய்லர் தைத்த உடைகள் கச்சிதமானவை. புகைப்பிடிப்பதை விட முடிந்தளவு நீங்களே திட்டங்களை தயாரியுங்கள். பிறரைப் பார்த்து திட்டங்களை காப்பியடிப்பது பெரியளவு உதவாது.
எழுதுங்கள் மறக்காது
எழுதுங்கள் என்பதை நான் மோட்டிமேஷன் என சொல்லிவிடுகிறேன். பெரிய போஸ்டர்களில் ஊக்கமான வார்த்தைகளை எழுதி வைத்து தினசரி படியுங்கள். மனப்பாடம் செய்யவேண்டும். அதை பார்த்து குற்ற உணர்ச்சி கொள்வது புகைப்பிடிக்கும் பழக்கத்தை மறக்க வைக்கும். தலைவர்களின் சிலைகளை செய்து வைத்துவிட்டு, அவர்களே வெட்கப்படும் அளவுக்கு ஊழல் செய்யும் அரசியலவாதிகளை இந்த இடத்தில் நீங்கள் நினைக்க கூடாது. நமது மனதின் குரலை நாம்தான் ஒலிக்கச்செய்யவேண்டும்.
இந்தியா டுடே கட்டுரையைத் தழுவியது.
கருத்துகள்
கருத்துரையிடுக