கொடுக்கு இல்லாத தேளின் ஆயுள், தேன்கரடியின் இயல்பு - பதில் சொல்லுங்க ப்ரோ?
கொடுக்கு இல்லாமல் தேளால் வாழ முடியுமா?
தென் ஆப்பிரிக்காவில் தாக்குதால் கொடுக்குகளை இழந்த தேள்கள் 8 மாதங்கள் தாக்குப்பிடிக்கின்றன. தேளின் பின்பகுதியில் கொடுக்கு மட்டுமல்லாது செரிமானப்பகுதி, ஆசனவாய் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. தனது வால்பகுதியை இழந்துவிடும்போது தேளின் வாழ்க்கை கடினமாகிவிடுகிறது. உணவு சாப்பிடும் அளவு குறைந்து மெல்ல இறக்கிறது.
தேன் கரடிகள் உண்மையில் தேனை உண்கிறதா?
சிலசமயங்களில் மட்டும். தேன் கரடிகளுக்கு முதன்மையான உணவு பழங்கள்தான். 90 சதவீதம் பழங்கள், இலைகள், பூக்கள், பூச்சிகளின் லார்வாக்களை உண்ணுகிறது. தேன் என்பது அதன் உணவு பட்டியலில் முக்கியமானது கிடையாது. தேன்கரடிக்குப் பிடித்தமான உணவு அத்திப்பழங்கள்தான்.
பறவைகளால் மனிதர்களைப் போலவே நிறங்களைக் காண முடியுமா?
பறவைகளின் பார்வைத்திறன்களைப் பற்றி நாம் முழுமையாக இன்னும் ஆராய்ச்சி செய்து அறியவில்லை. பறவைகளின் பார்வை அமைப்பு மனிதர்களைப் போலவே நிறங்களை அறியும் கோன் செல்களைக் கொண்டது. கூடுதலாக புற ஊதாக்கதிர்களை கண்டறியும் திறனும் பறவைக்கு ண்டு. இந்த திறன் மூலம், பழுத்த பழங்களையும், ஆண், பெண் பறவைகளுக்கு உள்ள வேறுபாடுகளையும் அறிய முடிகிறது. பறவைகளை நோக்கும் தன்னார்வலர்களைக் கூட பறவைகள் ஒரு கி.மீ. தொலைவிலிருந்தே எளிதாக அடையாளம் கண்டுவிடும் என பறவை யியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அடர்த்தியான நிறங்களால் ஹம்மிங் பேர்ட் ஈர்க்கப்படுவதே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
தாவரங்களை மயக்கமுறச் செய்யமுடியுமா?
தாவரங்களுக்கு நரம்பியல் அமைப்பு கிடையாது. ஆனாலும் அவை மனிதர்கள் மற்றும் விலங்குகளைப் போல மயக்குமுறுகின்றன. அனஸ்தீஸியா என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடலில் ஏற்படுத்தும் மாற்றம் பற்றி இன்னும் முழுமையாக நாம் புரிந்துகொள்ளவில்லை. விலங்குகளின் உடலிலுள்ள நரம்பியல் அமைப்பு, மின்தூண்டல்களை உருவாக்குகிறது. தாவரங்களிலுள்ள திசுக்களும் கூட குறிப்பிட்ட தொலைவுக்கு மின்தூண்டல்களை உருவாக்குகிறது. வீனஸ் ஃபிளைட்ராப், மிமோசா ஆகிய தாவரங்கள் ஈதர் கொடுக்கப்பட்டபோது அதன் எதிர்வினை ஆற்றி மயக்கமுற்றன.
தகவல்
BBC wildlife june 2022
q&A
காற்று மாசுபாடு
குறிப்பிட்ட திட, திரவ துகள்களும், வாயுக்களும் வளிமண்டலத்தில் அதிகம் பரவி ஏற்படுத்துவதே காற்று மாசுபாடு ஆகும். திட திரவ துகள்களும் வாயுக்களும் வாகனங்கள், சரக்குப் போக்குவரத்து, தொழிற்சாலைகள், தூசி, எரிமலை, காட்டுத்தீ ஆகியவற்றின் மூலம் பரவுகின்றன. காற்றில் பரவும் திட, திரவ துகள்களுக்கு ஏரோசோல் (Aerosols) என்று பெயர்.
காற்றில் உள்ள துகள்கள், அதனுடன் வேதிவினை செய்து ஏரோசோல் உருவாகின்றன. இதற்கு முக்கியமான காரணம், பெட்ரோலியம், மரம், நிலக்கரி ஆகிய கரிம எரிபொருட்களால் இயங்கும் வாகனங்கள்தான். இது நேரடியான முறை. இன்னொரு முறையாக, காற்றில் வேதிவினை ஏற்பட்டு துகள்கள், ஏரோசோல்களாக மாறுவது.
சூரிய வெப்பத்தை ஏரோசோல் எனும் இத்துகள்களில் சில ஈர்க்கின்றன, சில பிரதிபலிக்கின்றன. இது அவற்றின் நிறத்தைப் பொறுத்தது. கருப்பாக இருக்கும் துகள்கள் வெப்பத்தை ஈர்க்கின்றன. வெள்ளையாக இருப்பவை பிரதிபலிக்கின்றன.
https://climatekids.nasa.gov/air-pollution/
கருத்துகள்
கருத்துரையிடுக