வெப்பம் குறைந்து வரும் எரிமலைப் பகுதிகள்!
வெப்பம் குறைந்துள்ள எரிமலைப்பகுதிகள்!
பூமியில் அடியில் உள்ள வெப்பம் காரணமாக, பாறைகளை எரித்தபடி எரிமலைக்குழம்பு வெளியே வருகிறது. இப்படி எரிமலைக்குழம்பு வெளியேறும் இடங்களை எரிமலை என்கிறோம். எரிமலைக் குழம்பு வெளியேறும் நிலப்பரப்பிற்கு ஹாட்ஸ்பாட்(hot spot) என்று பெயர். பொதுவாக இப்படி எரிமலைகள் உருவாகின்றன என்றால் அந்த இடம், பூமியின் அடிப்பரப்பிற்கு நெருக்கமாக உள்ளது என்று பொருள்.
சில எரிமலைப்பகுதிகளில் வெளியேறும் எரிமலைக்குழம்பில் பல்வேறு வேதிப்பொருட்கள் உண்டு. குளிர்ந்த எரிமலையில் சிலசமயங்களில் எரிமலைக்குழம்பு வெளிவந்தாலும் அவை ஒப்பீட்டளவில் வெப்பநிலை குறைந்தவை என ஆய்வுகள் கூறுகின்றன.
நிலத்திட்டு, கடல்நீர்த்தட்டு ஆகியவை ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும்போது மலைகள், எரிமலைகள் தோன்றுகின்றன. நிலத்திட்டின் நடுப்பகுதியில் எரிமலை இயக்கங்கள் ஏற்படுவதாக புவியியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஹவாய் தீவுகள், தெற்கு அட்லாண்டிக் அஸ்சென்சன் தீவு, தெற்கு பசிபிக் பிட்கெய்ர்ன் தீவுகள் ஆகியவற்றை உதாரணமாக கூறலாம்.
பல்வேறு தனிப்பட்ட பகுதிகளில் எரிமலை வெடிப்பு இருப்பதை ஆய்வாளர் ஸியுவான் பாவோ என்று ஆய்வாளர் தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள யுசிஎல்ஏ பல்கலைக்கழக ஆய்வுக்குழு இது. பூமியின் அடிப்பகுதியிலிருந்து எரிமலைக்குழம்பு வெளிவருவதோடு, இதில் நீரும் சேர வெப்ப நீரூற்றும் வருகிறது என கண்டறிந்துள்ளனர். இந்த முறையில் 26 எரிமலை பகுதிகளை கண்டுபிடித்து அதன் வெப்பத்தை அளவிட்டனர்.
இப்படி சோதித்த இடங்களில் பல்வேறு இடங்களில் எரிமலை வெடிப்பு வெப்பம் குறைவாகவே இருந்தது. இங்கு, தோராய வெப்பத்தை கணக்கிட்டனர். கூடவே, பல்வேறு இடங்களில் உள்ளே பாறைகள் இல்லை. இதனால் அதன் வெப்பம் கூடுதலாக இல்லை. பத்து எரிமலை வெடிப்பு பகுதிகளை சோதித்ததில், அவை 50 முதல் 136 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தைக் கொண்டுள்ளது தெரிய வந்தது. இதில், நான்கு இடங்கள் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை மட்டுமே கொண்டிருந்தன. தீவுகளில் இப்படி எரிமலை வெடிப்பு இடங்களில் வெப்பம் குறைந்துள்ளதற்கான ஆதாரங்கள் குறைவாகவே கிடைத்துள்ளன. ஆராய்ச்சியில் தகவல்களை மேலும் அறியும்போது, கண்டங்கள் உருவானதற்கான துல்லியமான காரணத்தை நாம் அறியமுடியும்.
Science news
Some volcanic hot spots arenot so hot (Sid perkins)
Science News 12.2.2022
கருத்துகள்
கருத்துரையிடுக