நேர்காணல்- குருதேவ்தாஸ் குப்தா

நேர்காணல்- குருதேவ்தாஸ் குப்தா

மோடியின் விரைவான சீர்திருத்தங்களினால் தொழிலாளர்களின் நலன்கள் சீர்குலைந்துபோகும்.


-    பர்வேஸ் ஹபீஸ்


தமிழில்: தியோ வான்யா

மூத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான குருதேவ்தாஸ் குப்தா பிரதமர் நரேந்திரமோடி அறிமுகப்படுத்தியுள்ள தொழிலாளர் நலச்சட்டங்களுக்கான திருத்தம் என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு தலை வணங்குவது போன்றதாகும் என்பவர் இந்த திருத்தங்கள் முறைகேடான வணிகம் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், சுரண்டலை சட்டபூர்வமாக்கும் வழிமுறை என்று உறுதிபடக்கூறுகிறார்.

பிரதமர் மோடி இன்ஸ்பெக்டர் ராஜ் திட்டம் முடிவு பெற்றதாக அறிவித்திருக்கிறார். அதன் தாக்கம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பிரதமரின் அறிவிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் முதலிலேயே இங்கு இன்ஸ்பெக்டர் ராஜ் திட்டம் இல்லை. அத்திட்டம் என்றோ முடிவுக்கு வந்துவிட்டது. மேற்பார்வையிடுதல் என்பதை குறைந்த அளவிலும், தொழிலாளர் துறையில் செயல்படுத்தப்படுவது இல்லை. தொழிலாளர் வைப்பு நிதி உயர்வு பற்றி பிரச்சனைகளில் பெரும் தொழில் நிறுவனங்கள் போதுமான அளவு கட்டுப்படுத்தப் படவில்லை. தொழிலாளர்களுக்கு அத்தொகை சரியான நேரத்தில் சென்று சேர்வதில்லை. மற்ற பகுதிகளிலும், மேற்பார்வையிடுதலும், கண்காணிப்பு தேவைப்பட்டாலும் அவை சரியாக நிறைவேற்றப்படவில்லை. இவைதான சட்டப்பூர்வமாக்கப்பட்ட வேண்டும். கவனக்குறைவான மேற்பார்வையிடுதல் என்பது சட்டபூர்வமாக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் ராஜ் என்கிற மந்திரத்தின் கீழ் அறிவிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் தரப்பை ஏமாற்றும் பெரும் தந்திரம் ஆகும்.

      இதன் தாக்கம் என்னவென்றால் பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் ஆக்கிரமிப்பாளராக வலிமையானவர்களாக மாறுவார்கள்.

அமைப்பு சாராத அல்லது முறைப்படுத்தப்படாத தொழிலாளர்களுக்கு நேருவது என்ன?
அமைப்புசாராத அல்லது முறைப்படுத்தப்படாத தொழில் நிறுவனப்பணியாளர்களுக்கு பொதுவாகவே எந்த பலன்களையும் அனுபவிக்கமுடியாத நிலைதான் உள்ளது. அவர்களுக்கு வருங்கால வைப்புநிதி சேமிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு தரப்படுவதாக கூறப்படும் சம்பளத்தொகையினைக் காட்டிலும் குறைவாகவே தரப்படுகிறது. பணிக்கொடை பற்றி கேள்வி கூட எழுவதில்லை. பிரதமரின் அறிவிப்பு ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களின் வாழ்வை மேலும் பரிதாபத்தில் கீழ்மையில்தான் தள்ளும்.

மோடி பரிந்துரைக்கும் தொழிலாளர் சீர்த்திருத்தத்தின் வாயிலாக இந்தியா முன்னணி உற்பத்தி மையமாக மாற வாய்ப்பு உள்ளதா?

நிச்சயம் பன்னாட்டு நிறுவனங்களை புதிய அரசு டெல்லியில் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிப்பதை மறுத்திருந்தால்; தொழிலாளர்களுக்கான சட்டங்களை, குறைவான ஊதியம் உள்ளிட்ட குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை நீக்க பன்னாட்டு நிறுவனங்களைக் கேட்டுக்கொள்ளும் ஊக்கம் பெற்றிருந்தால் மட்டுமே உற்பத்தி துறையில் வருமானத்தை நாம் எதிர்பார்க்க முடியும்.

சீர்திருத்தங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்களா?

      எதிரிடையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகத்தான் நான் கருதுகிறேன். தொழிலாளர் நலச்சட்டங்களில் பெரும் சீர்குலைவு ஏற்படும் நிலை உள்ளது. கூலிக்கு அமர்த்தும், வேலையிலிருந்து நீக்கும் என எதேச்சதிகார நிலையினால் தொழிலாளர்களின் மிச்ச உரிமைகளும் பறிக்கப்படும் சிதைவுறும் நிலை உள்ளது. தொழிலாளர்களின் முதலாளிகளின் கருணையில் மட்டுமே வாழ முடியும் என்ற நிலை ஏற்படும்.

பிரதமர் தொடங்கிய ஸ்ரமேவ ஜெயதே( உண்மையாக உழைப்போம்) எனும் திட்டத்தில் உலகளாவிய தொழிலாளர் கணக்கு எண் வருங்கால வைப்புநிதிக்கு வழங்கப்படுவது, ஒற்றைச்சாளர வசதி மூலம் தொழில் அமைச்சகத்தின்  தொழில் செய்ய அனுமதி, மேற்பார்வை அனுமதி என தொடங்கப்பட்டு இருக்கிறது. இதுபற்றிக் கூறுங்களேன்?

      மேற்சொன்னதில் நல்ல அம்சங்கள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதனை ஆழமாகப்பார்த்தால் குழுவாக இல்லாது பணிபுரியும் 93% விழுக்காடு தொழிலாளர்களுக்கு கணினியைப் பயன்படுத்துதல் என்பது சாத்தியமான வரம்பில்லை.


தொழிலாளர் பாதுகாப்பில் இவை பாதிப்புகளை ஏற்படுத்துமா?

      தொழிலாளர் நலன்களுக்கு இது கெடுதலான தாக்கத்தை ஏற்படுத்தும் விபத்து உள்ளது. தொழிலாளர் நலன்களுக்கான தொகையைக் குறைப்பது, மற்றும் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான அளவுகளை செயல்பாடுகளை சமரசம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

நிறுவனங்கள் சுயமாக சான்றிதழ் பெறுவது என்பது செயல்படும்படியான ஒன்றா?

இல்லை. நிச்சயமாக இல்லை. பெரு நிறுவனங்கள் நேர்மையை எப்போதும் அறிந்ததில்லை. நடைமுறையில் பெரு நிறுவனங்கள் பல்வேறு சட்டங்களை சிதைப்பவர்களாகத்தான் உள்ளார்கள். வருமானவரி அல்லது உற்பத்தி செய்யும் பொருளின் அளவைக் குறைத்துக்காட்டி அதிக லாபத்தை அறுவடை செய்கிறார்கள்.

பிரதமர் அறிவித்த தொழிலாளர் சீர்திருத்த திட்டங்களில் தொழிலாளர் களுக்கு பயன்படும்படியான திட்டங்கள் எதுவும் நீங்கள் எதுவும் காணவில்லையா?

      தொழிலாளர்களின் நலனுக்கு எதிரான அரசு அவர்களுக்கு ஆதரவான திட்டத்தை உருவாக்க முடியும் எப்படி நான் எதிர்பார்க்க முடியும்? தொழிலாளர் சீர்திருத்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டதே முதலாளித்துவவாதிகள், பெரு நிறுவனங்களுக்காகத்தான். பா.ஜ.க பெரு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுவதாக கூறியதன் பின்னால்தானே அவர்கள் வெற்றிபெற முடிந்தது. தொழிலாளர் சட்டங்களை திருத்தி, பெரு நிறுவனங்கள் தன்னிச்சையாக தாங்கள் லாபம் பெற பல லட்சம் தொழிலாளர்களை சுரண்டுகிறார்கள்.

தொழிலாளர்களின் நலனுக்கு எதிரான இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுக்கும் திட்டமிருக்கிறதா?

      தொழிலாளர் நலன்களை நீர்த்துப்போகச்செய்யும் சட்டத்திருத்தத்தை எதிர்த்து மத்திய வர்த்த தொழிலாளர் சங்கங்கள் புரட்சிப்போராட்டம் நடத்த உள்ளனர். டிசம்பர் ஐந்தாம் தேதி இந்தியா முழுக்க போராட்டங்கள் நடைபெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிஎம்எஸ், ஏஐடியுசி, ஐஎன்டியுசி, சிஐடியு, ஹெச்எம்எஸ் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டக்களத்தில் இறங்கப்போகின்றனர். இது அனைத்து தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கிணைந்த குரலாகும்.

                        நன்றி: டெக்கன் கிரானிக்கல் (19.10.2014)



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்