இந்திய வேளாண்மையின் சவால்கள்
இந்திய வேளாண்மையின்
சவால்கள்
இரா.முருகானந்தம்
இந்தியா ஒரு வேளாண்மை சார்ந்த நாடு என நாம் வெகு நாட்களாக சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
சந்தேகமின்றி இந்தியா இன்றும் கூட வேளாண்மை சார்ந்தே இருக்கின்றது. இந்தியா போன்ற செறிவான
மக்கள் தொகை கொண்ட மித வெப்ப மண்டல நாடு வேளாண்மையைச் சார்ந்ததாக இருப்பதால் மட்டுமே
ஆயிரம் பின்னடைவுகள் இருப்பினும் ஒரு நாடாக நீடிக்க முடிகிறது. இது இயல்பானதும், புவியியல்
மானுடவியல் காரணிகளை உள்ளடக்கியதுமாகும். மக்கள்தொகை பெருக்கமும், நெருக்கமும் மிக்க
இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் வேளாண்மையை
முதன்மைப்படுத்தியே தங்களின் இருப்பை உறுதி செய்து கொள்ள முடிகிறது.
இந்திய வேளாண்மை விரிவானதொரு வரலாறு, பண்பாடு,
மரபார்ந்த பின்னணி கொண்டது. வேளாண்மை என்பது முன்னோடிகளால் ஒரு தொழிலாக ஒரு வாழ்க்கை
முறையாக கருதி செய்யப்பட்டது. இந்தியாவின் சிக்கலான சமூகப்படி நிலைகளைத் தீர்மானிக்கும்
காரணியாக வேளாண்மையும், அதன் முக்கிய ஆதாரமான நிலங்களுமே இருந்தன என்பதை நமது வரலாற்றை
ஓரளவு கவனித்தாலே புரிந்துகொள்ள முடியும்.
ஆங்கிலேயர்களின் வருகையும், அவர்களின் இருநூறாண்டுகளுக்கும் மேலான ஆட்சியும்
இம்மண்ணில் பலதளங்களை ஏற்படுத்தியது போலவே பெரும் தாக்கத்தையும், மாற்றத்தையும் இந்திய
வேளாண்மையின் மீதும் ஏற்படுத்தியது. அதுவரை உணவுப்பொருட்களுக்கான உற்பத்தியை முதன்மையாக
கொண்டிருந்த இந்திய வேளாண் சமூகம் மெல்ல பருத்தி மற்றும் இதர பணப்பயிர்களை பயிரிட ஊக்குவிக்கப்பட்டது.
ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் தேவைக்கான கச்சாப்பொருட்களை உற்பத்தி செய்யவே
ஆங்கிலேயர்கள் இந்திய வேளாண்மையின் முன்னுரிமையை மாற்ற முனைந்தனர். தென்னாப்பிரிக்காவிலிருந்து
இந்தியா திரும்பிய காந்தி இந்தியாவில் நடத்திய முதல் சத்தியாகிரக போராட்டம் சம்பாரன்
சத்தியாகிரகம் ஆகும். இது அவுரி பயிரிடும் விவசாயிகள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் வறுமைக்கு
தள்ளப்பட்டதை எதிர்த்து நடந்ததாகும்.
இதன் பிறகான இந்திய வேளாண்மையின் போக்குகள்
அனைவரும் அறிந்ததே. விடுதலை அடைந்த இந்தியாவின் நாடாளுமன்றத்தில் முதல் உரையாற்றிய
நேரு ‘’ யாரும் எதற்காகவும் காத்திருக்கலாம்.
ஆனால் எதற்காகவும் வேளாண்மை காத்திருக்க முடியாது ’’ என்ற வரிகளைக் கூறினார். பசுமைப்புரட்சி,
உணவு உற்பத்திப்பெருக்கம், ஆகியவற்றைப்பற்றியும், இதன் சாதக, பாதகங்கள் பற்றியும் அதன்
எதிர்விளைவுகளை குறித்தும் மாற்றுவழி உரங்கள் பற்றியும், இயற்கை சார் வேளாண்மை பற்றியும்
விரிவான தளத்தில் விவாதங்கள் நிகழும் ஒரு சூழலைக்கடந்துகொண்டிருக்கிறோம்.
இந்தப்பின்னணியில் நாம் இந்திய வேளாண்மையும்,
வேளாண்மையை மேற்கொள்ளும் உழவர்கள், வேளாண் தொழிலாளர்கள், நுகர்வோர்கள் அரசுகள் ஆகிய
பலதரப்பும் சவாலான ஒரு காலகட்டத்தை கடந்து கொண்டுள்ளோம்.
உற்பத்தியை பொறுத்தளவில் இந்தியாவில் உள்நாட்டுத்தேவையைக்
காட்டிலும் மிகுதியான உற்பத்தியைக் கொண்டுள்ளோம். ஆயினும் கூட ஒப்பீட்டளவில் குறுகியப்பரப்பில்
அதிக உற்பத்தியை ஈட்டும் விகிதம் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளைக் காட்டிலும் குறைவே.
நீர்மேலாண்மையை ஒரு இயக்கமாக எடுத்துச் செல்வது உடனடியான தேவையாகும். நுண்ணீர் பாசன
நுட்பங்கள் பெருமளவு நிலங்களைச் சேர்த்தாலன்றி குறைவான நீரில் நல்ல மகசூல் என்கிற காலகட்டாயத்தை
நாம் வெற்றிகரமாக கடக்க இயலாது.
வேளாண்மை உற்பத்திக்கான செலவு இதர துறைகளின்
உற்பத்திக்கானதைப் போன்றே பன்மடங்காக அதிகரித்துள்ள நிலையில் வேளாண் விளை பொருட்களுக்கான
விலை உயராமல் நாம் பார்த்துக்கொண்டுள்ளோம். விலைவாசிக்கு எதிராக பேசுவது வெகுசன அரசியலின்
முக்கியக்கூறாக உள்ளது. ஆனால் தாங்கள் அன்றாடம் உண்டு உயிர்வாழத்தேவையான உணவு உற்பத்திக்கான
செலவு குறித்து புரிதலின்றி விலைவாசியைக் கட்டுப்படுத்துவது என்கிற மாயமான் வேட்டையை நடத்திக்கொண்டு வருகிறோம். வேளாண்மை
லாபகரமாக இல்லை என்பதால் வேளாண் குடும்பங்களை சேர்ந்த இளந்தலைமுறையினர் வேகமாக வேளாண்மையைக்
கைவிட்டு வரும் சூழலில் நமது அரசும், சமூகமும் தங்களின் உணவுக்குரிய விலையை உழவர்களுக்கு
தர முன்வரவேண்டும்.
வேளாண்மை விளைபொருட்களை ஏற்றுமதி செய்வது
குறித்து கொள்கை முடிவுகளை இந்தியாவில் வர்த்தக அமைச்சகம் மேற்கொள்ளும் அபத்தமான நடைமுறை
ஒரு விவசாயியை கடும் கோபமூட்டக்கூடியது. விவசாயிகளின் உற்பத்தியை ஏற்றுமதி செய்வது
குறித்து அறிவுரைகளை தொழிலதிபர்களும், ஜவுளித்துறையினரும் வழங்கும் முட்டாள்தனத்தை
நிறுத்தியாக வேண்டும். வேளாண் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான கொள்கை
முடிவுகளை மேற்கொள்ள அமைச்சரவை மற்றும் மண்டலவாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேளாண் பிரதிநிதிகளின்
கூட்டுக்குழுவும் முடிவெடுக்கும் வழிவகைகள் ஆராயப்படவேண்டும்.
வேளாண்மைக்கான கடன்களை வழங்குவதை ஒரு பாவச்செயலாக
கருதும் வங்கிகளின் மனோபாவம் எதன் காரணமாக ஏற்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. வேளாண்மைக்கான
கடன் நமது உணவு உற்பத்திக்கான முதலீடு என்கிற விஷயம் கூடப்புரியாமல் நாம் வேளாண் கடன்கள்
மற்றும் அதற்கான வட்டி விகிதங்களை நிர்ணயித்துக்கொண்டுள்ளோம். வேளாண்கடன்களுக்கு வட்டி
இல்லை என்கிற கொள்கை முடிவை தமிழக அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைப்படுத்தியது.
இதன் சாதகமான விளைவுகளை கடந்த இரு ஆண்டுகளாக தமிழக வேளாண் கூட்டுறவு சங்கங்கள் சந்தித்து
வருகின்றன். முன்னோடியான இம்முடிவை மத்திய அரசும், இதர மாநில அரசுகளும் மேற்கொள்ள வேண்டும்.
வேளாண் கடன்களை கடன் என்கிற சொல்லாடலைத்தவிர்த்து
வேளாண்மை மானியம் எனக்கூறவேண்டிய காலத்தில் நிற்கிறோம். வேளாண்மைக்காக நாம் செலவிட்டதாக
கூறும் தொகையில் எத்தனை விழுக்காடு உழவர்களை அடைந்தது என்கிற புள்ளி விவரங்களை நாம்
சற்று ஆராய்ந்தாலே இந்த நாடும், சமூகமும் உழவர்களின் பிச்சை மூலம் இயங்குவது புலனாகும்.
உழவர்களுக்கான மானியங்கள் நேரடியாக அவர்களை அடைய வங்கிகள், தபால் அலுவலகங்கள், நவீன
தொலைத்தொடர்பு, மின்னணு நிர்வாகம் ஆகியவற்றின் சாத்தியங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து
பயன்படுத்த வேண்டும்.
ஒரு உழவர் தனது வேளாண்மையுடன் இணைத்து
மேற்கொள்ளும் அனைத்தையும் வேளாண்மை சார்ந்த தொழில்களாக வரையறுத்து அதற்கான ஒரு கொள்கையை
வடிவமைக்க வேண்டும். கால்நடைவளர்ப்பு, உணவுப்பொருட்களை மதிப்பூட்டுதல், உள்ளிட்டவற்றில்
விவசாயிகளின் நேரடிப்பங்களிப்பு, அதற்கான கடன் வசதிகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
வேளாண்மையின் ஆதார சக்தியான வேளாண்தொழிலாளர்களின்
சமூக, பொருளாதார நிலை மிகவும் கவலை தரக்கூடியது. இதர கைத்திறன் தொழிலாளர்கள் மதிப்பான
வருவாயை இப்போது அடைந்து வரும்நிலையைக் கண்டால் அவர்கள் பின்தங்கியே உள்ளார்கள். இதனால்
இவர்கள் வேறு தொழில்வாய்ப்புகளையும், நகரங்களையும் நோக்கி நகர்கின்றனர். இதனால் நகர்ப்புற
சேரிக்கள் பெருகுவதும், வேளாண்மைக்கான ஆள்பற்றாக்குறையும் சமகாலத்தில் ஏற்பட்டுள்ளன.
இதில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் இந்தியாவில் பயிர்க்காப்பீடு என்பது
விவசாயிக்கு புரியாத சொல்லாக இருக்கிறது. பயிர்க்காப்பீட்டிற்காக கடன்தொகையில் பிடித்தம்
செய்யப்படும் தொகையின் இருபது விழுக்காடு கூட இதுவரை வழங்கப்பட்டதில்லை. ஒரு விவசாயிக்கான
இழப்பு என்பது பல சாத்தியங்களைக்கொண்டது. மழை, வெள்ளம், காற்று, நோய்கள், வறட்சி என
பலமுனைத்தாக்குதல்களைக் கொண்டதாக அது உள்ளது. ஆனால் குறைந்தபட்சம் ஒரு வட்டாரம் பாதிக்கப்பட்டால்தான்
பயிர்க்காப்பீட்டினைப் பெற முடியும். இதுபோன்ற அபத்தமான விதிமுறைகளைக் கொண்ட பயிர்க்காப்பீட்டு
கொள்கை மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
இந்தியா என்கிற பெருமரத்தின்
வலிமை வேளாண்மை என்கிற வேரில் நிலைகொண்டுள்ளது. வலிமையிழந்துவரும் வேருக்கு நீர்பாய்ச்சும்
வரலாற்று தருணத்தில் நாம் நிற்கிறோம்.
�ழ�� R � � X� �^� � நலன் சட்டங்களை திருத்துவதால் அதிக நேரம்
பணிபுரிய நேரிடும். ஓய்வூதிய நலன்களும் புதிய திருத்தங்களினால் தொழிலாளர்களுக்கு சொற்பமாகவே
கிடைக்கும்.
தொழில்
நிறுவனங்களுக்காக விவசாய நிலம், கனிம வளங்களைக் கொண்டுள்ள வனங்கள், உள்ளிட்டவை விரைவாக நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில்
கையகப்படுத்தப்பட்டு குறைந்த விலைக்கு அதிக ஆண்டுகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு
குறைந்த விலைக்கு வாடகைக்கு தரப்படும்.
நாட்டின்
பொருளாதாரம் உள்நாட்டு உற்பத்தி முதலீடுகளை நம்பியிருந்த வகையில் உலகளவில் ஏற்படும்
பொருளாதார பாதிப்புகளை தவிர்க்க முடிந்தது. அந்நிய முதலீடு என்பது எங்கு லாபம் சம்பாதிக்க
முடியுமோ அங்கு செல்லும் பேராசை வணிகர்களின் பையில் உள்ள பணம். மானிய உதவிகள், சலுகைகளைப்பெற்று
வருமானம் ஈட்டியபின் வெளியேறும்போது முன்பு அரசுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்
படி அவர்களை இந்திய நீதிமன்றத்தினால் கட்டுப்படுத்தமுடியாது.(எ.கா: வோடஃபோன் வரி வருவாய்
வழக்கு, நோக்கியா மீதான விதி மீறல், வரிவருவாய்வழக்கு) நிலையில்லாத பொருளாதார நிலைமை
நிலவும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
அரசு
பொதுத்துறை நிறுவனங்களுக்கான போட்டியும் கட்டுப்பாடும் அதிகரிக்கப்படும். லாபத்தில்
இயங்கி வரும்போதே பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள் சிறிது சிறிதாக தனியாருக்கு விற்கப்படும்போது,
வரும் காலத்தில் தனியாரின் நெறிகளைக் கடந்த போட்டியினால் இழப்புக்குள்ளாக்கப்படுபவை
தனியாருக்கு மலிவான விலையில் விற்கப்படும் அபாயம் உள்ளது.
உள்நாட்டு
மக்களுக்கான தேவைகளை தீர்க்கும் வகையிலான தற்சார்ப்பு உற்பத்தி முறைதான் ஒரு நாட்டின்
பொருளாதாரத்தை பாதுகாக்கும் என்று காந்திய பொருளாதார அறிஞர் குமரப்பா கூறியது நினைவுக்கு
வருகிறது. மக்களுக்கான பணி பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை சுதந்திரமடைந்து அறுபத்தெட்டு
ஆண்டுகளுக்கும் பின் செய்யமுடியாமல் இருக்கும்போது, அந்நிய முதலீடு என்பது வாழ்க்கையை
மாற்றிவிடும் என்பது இந்தியா ஒளிர்கிறது என்கிறதைப் போலான வார்த்தை மாயஜாலமே தவிர வேறொன்றுமில்லை.
நாட்டின் வளர்ச்சி என்று கூறி வறுமையில் இருக்கும் பலகோடி மக்களை சுரண்டலுக்கு ஆட்படுத்தி பெருநிறுவனத்தலைவர்களுக்கு
லாபம் சம்பாதித்துக் கொடுக்கத்தான் உதவும். இது தொடக்கம்தான் இன்னும் வெகு தொலைவு பயணிக்க
வேண்டியிருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக