இயற்கை வளம் கெடும் பிரேசில்! - புதிய அதிபரின் அட்டகாசம்





பிரேசிலில் உரங்களுக்கு அனுமதி!


பிரேசிலில் வலதுசாரி கருத்தியல்கொண்ட பொல்சொனோரோ தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்மையில் 152 உரங்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். விவசாய அமைச்சகம் சார்ப்பில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


உலகிலேயே அதிகளவு உரங்களைப் பயன்படுத்தும் நாடுகளில் பிரேசில் முன்னணி வகிக்கிறது.  2015 ஆம் ஆண்டு 139 உரங்களும், 2018 ஆம் ஆண்டு 450 உரங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் 1300 உரங்களுக்கு அனுமதி வழங்கப்படவிருக்கின்றன.


உரக்கம்பெனிகளில் அமெரிக்க, சீனக்கம்பெனிகளே அதிகம்.  இதுகுறித்து தெரசா கிறிஸ்டினா, முழுக்க உரக்கம்பெனிகளுக்கு நாங்கள் அனுமதி தரவில்லை என சமாளிப்பு பதில் அளித்திருக்கிறார். விவசாயத்தை மேம்படுத்துவதற்காக நாங்கள் உரங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறோம். இதன்மூலம் சரியான உரங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் உண்மை அதுவல்ல.

தனிநபர் ஒருவருக்கு தோராயமாக 7 லிட்டர் அளவு உரம் பயன்படுத்தப்படுவது பிரேசில் நாட்டில் மட்டும்தான். இதனால் உணவுப்பொருட்களின் வழியாக நச்சுப்பொருட்கள் அதிகரிக்கிறது என்ற உண்மை இவர்கள் அறியாததல்ல. இதுகுறித்து ஆய்வு செய்த தன்னார்வ நிறுவனமான ஆஸ்வால்டோ க்ரூஸ் நிறுவனம், உர நச்சுக்களால் ஆண்டிற்கு 1 லட்சம் பேர் பாதிக்கப்படுவதை ஆய்வுப்பூர்வமாக பதிவு செய்துள்ளது.




அரசின் அதிகாரம், மிரட்டல், மருந்து கம்பெனிகளின் அரசியல் தீவிரம் ஆகியவற்றுக்கு பயந்து பலரும் இதுகுறித்து பாதிப்புகளை முறையாக அரசிடம் பதிவு செய்வதில்லை. உள்ளூர் நிர்வாகம் குறிப்பிட்ட பூச்சிக்கொல்லிகளை பரிந்துரைத்து, அதை ஏற்க மறுத்து பேசிய விவசாயி மர்மமான முறையில் கொல்லப்பட்டதை பலரும் இன்னும் மறக்கவில்லை.


பொல்சனாரோவின் நூறு நாட்களில் நாட்டில் 30 சதவீதம் பேர் அவரது அரசியல் முடிவுகளால் அதிருப்தி அடைந்துள்ளனர். இன்னும் அதிருப்தி பெருகாமல் அவர்  தன்னை திருத்திக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்த திசையில் அவர் சிந்திக்கவேண்டுமே.