சேட்டன் பகத்தின் What young india wants

சேட்டன் பகத்தின் What young india wants நூலில் உள்ள Youth பகுதியின்  தமிழ் மொழிபெயர்ப்பு ‘இளைஞர்களின்  இந்தியா’ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது.


                                                                  ஆக்கம்: வின்சென்ட் காபோ

                                                                         3
                                           கல்வி இல்லாமை தேவையில்லை


குடிமக்கள் அனைவரும் கண்டிப்பான ஆசிரியர்களாக மாறி, தலைவர்களுக்கு பல்வேறு வீட்டுப்பாடங்களை செய்யுமாறு வற்புறுத்தவேண்டும்.

      மனிதவளத்துறை புள்ளிவிவரங்கள் தேசிய அளவிலான தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சியடைந்துள்ளதை விரிவாக காட்டுகிறது. மக்கள்தொகையில் குழந்தைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதைப்பார்த்தால் முடிவுகள் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு இந்தியருக்கும் கல்வி என்ற விஷயத்தில் இன்னும் இரைச்சல்கள் நம்மிடையே குறையவில்லை. நம் நாட்டின் மேம்பட்ட வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் இந்த புள்ளிவிவரம் காட்டும் உண்மையை அறிந்து அதனைப்பற்றி எந்த கவலையும் படாமல் இயல்பாக மறந்துவிட்டு, அடுத்த பரபரப்பு செய்திக்கு மாறிவிடுகிறோம்.

     இந்தியாவிலுள்ள மக்கள் அனைவரும் உலகமயமாக்கலுக்கான சவால்களை சந்திக்க தேவையான பயிற்சியை  மேற்கொள்ளாவிட்டால், அதற்கான முதல் படிநிலையான தொடக்க கல்வியை சரியானபடி அமைக்காதபோது, நாடு முழுவதும் விரைவில் தொழிலாளர்களும், கணக்கர்களுமாக மட்டுமே இருப்போம். நமது தலைவர்கள் தத்தமது ஊழல்களை மறைக்கவே கடும் பிரயத்தனப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது, மக்களுக்கான கல்வியைப்பற்றி யார் கவலைப்படுவது? குடிமக்கள் கல்வியில் போதுமான கவனம் செலுத்தும் போது, தலைவர்களும் அதை கவனிக்கக்கூடும். இந்த நம்பிக்கையோடு, இந்த சிதைவிற்கான காரணம், இதை கண்டுகொள்ளாதபோது, என்ன நிகழும்? இதைத்தீர்க்க நாம் என்ன செய்யவேண்டும்?

     பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை வீழ்ச்சியை 5 முக்கிய காரணங்கள் உண்டு. முதலாவது, தெளிவான காரணம், பள்ளிகளின் படுமோசமான நிலைமைதான். கிராமத்திலுள்ள ஒரு பள்ளிக்கூடத்தை எப்போதாவது உள்ளே சென்று பார்த்திருக்கிறீர்களா? அங்கிருக்கும் அனைத்தும் மலிவான தரத்தினைக்கொண்டிருக்கும்; வகுப்பறையிலிருந்து, பெஞ்சுகள், மேசைகள், ஆசிரியர்கள் வரை. ஏன்? கிராமத்தினர் தங்கள் குழந்தைகள் படிக்க நல்ல பள்ளியை எதிர்பார்க்க கூடாதா? சிலர் கூறலாம், பள்ளிகள் அரசின் மானிய உதவியினால் நடத்தப்படுகிறது; அதனால் தரத்தினை பராமரிக்க முடியாது என்று. தரத்தினைப்பெற நிறைய பணம் தேவைப்படுகிறது. இதற்காக நமக்கு நிறைய தனியார் பங்குதாரர்கள் தேவைப்படலாம். பழமையான கல்விமுறையினை மாற்றி தொழில்நுட்பத்தின் மூலம் கல்வியை பயிற்றுவிக்கவேண்டும். தொடக்க கல்வியாக இருந்தாலும், அதற்கு நல்ல தரம் தேவைப்படுகிறது. மலினமான தரம் கொண்ட கல்வி என்பது கல்வியே அல்ல.

     இரண்டாவது, நமது பள்ளிகளின் பாடத்திட்டம் காலாவதியாகி நெடும்நாட்களாகிவிட்டது. கடந்த முப்பது ஆண்டுகளில் தொழில் உலகம் எவ்வளவு மாற்றங்களை பெற்றுள்ளது?  நமது பாடத்திட்டம் எந்தளவு மாறியுள்ளது? நம் பாடத்திட்டத்தை உருவாக்குவது யார்? தொழில், சேவைத்துறை ஆகியவற்றின் தேவைகளை மனதில் கொண்டுதான் காலத்திற்கு காலம் அதனை மாற்றியமைத்திருக்கிறார்களா?

     ஏழைமக்கள் தம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, அதிக அளவில் பணம் சம்பாதிக்கும் திறமையைப் பெறவேண்டும்; கற்க வேண்டும் என்பதற்குத்தான். பள்ளிகள் அந்த திறமையை அக்குழந்தைகளுக்கு அளிக்காதபோது, அவர்களின் கஷ்டங்களுக்கு யார் காரணம்?

     பணமில்லாத ஏழை மக்களிடம் மேம்பட்ட கருத்துக்களை பேரார்வத்தை திருப்தி கொள்வதுதான் கல்வி (அ) கற்பதில் உள்ள மகிழ்ச்சி என்றெல்லாம் கூறுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. பசியோடு இருப்பவன் டிஸ்கவரி சேனல் எப்படி பார்க்கமுடியும்? ஆங்கில அறிவினை ஓரளவு பெற்றவர் சம்பாதிக்கும் திறன் 400 விழுக்காடு அதிகமாக உள்ளது என்பது ஆய்வுகளில் தெரியவருகிறது. ஏன் நமது மக்களுக்கு ஆங்கிலத்தை பயிற்றுவிக்கக் கூடாது? இதனை அரசு ஏன் மிகத் தாமதமாக இதை செய்ய தொடங்குகிறார்கள்?

     மூன்றாவது, பெருமளவு பணவீக்க மதிப்பு உயர்வு குறைந்த வருமானம் கொண்டவர்களின் வாழ்வினை பெரும் சிக்கலுக்குள் ஆழ்த்துகிறது. பள்ளிக்கு ஒரு குழந்தையை அனுப்பி வைத்து படிக்க வைப்பதை விட வேலைக்கு அனுப்பி வைத்து அதன் மூலம் பெறும் வருமானம் அதிகமாக உள்ளது தெளிவான ஒன்று.

     நான்காவது, தேவையான பணத்தை கல்விக்காக ஒதுக்கி பல பள்ளிகளை உருவாக்காதது, (அ) இருக்கும் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தாது அலட்சியப்படுத்துவது என்று நிகழ்கிறது. வரிவருவாய் கடந்த சில ஆண்டுகளாக இரட்டை எண்ணிக்கையில் அதிகரித்துவருகிறது. வரி கட்டுபவர்களின் பணமானது, ஊழல்களின் மூலம் வீணடிக்கப்படவோ, பெரிய அளவிலான லஞ்சப்பணம் போல மானியங்கள் தரப்படுவது (அ) வட்டி கொடுக்க ( முந்தைய ஆண்டில்  திட்டச்செலவுக்காக வாங்கிய பணத்திற்கான வட்டி)

     2ஜி செயல்பாடுகள் சரியாக அமைந்தால், (அ) காமன்வெல்த் விளையாட்டுக்களில் பெரிய அளவு பணம் வீணடிக்கப்படாமலிருந்தால், நாம் பல பள்ளிகளை தொடங்கியிருக்க முடியும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம்(NRGA) பதிலாக கிராமத்தினருக்கு சரியான திறன்களை மேம்படுத்தவும், விவசாய வருமானத்திற்கான அதிகரிக்கவும், வேலைவாய்ப்பு விழுக்காடு உயரவும் உதவுவதன் மூலம் செழிப்பான வளர்ச்சியினைப்பெற முடியும்.

     ஐந்தாவது, சர்சைக்குரிய காரணம்: கல்வி அறிவின்மையினால் அரசியல்வாதிகளுக்கு மறைமுகமாக கிடைக்கும் லாபங்கள். ஊழல் கட்சிகள் தொடர்ந்து இயங்க படிப்பறிவில்லாத மக்கள்தான் ஓட்டுவங்கியாக உதவுகிறார்கள். அனைவருக்கும் கல்வி கிடைத்தால் அரசு எப்படி பல ஊழல்களை செய்யமுடியும்?

     ‘’மக்கள் எங்களுக்கு வாக்களித்திருப்பது எங்களது செயல்சரியானவை என்று காட்டுகிறது’’ என்று அரசியல்வாதிகள் தொடர்ந்து கூறுகிறார்கள்.

     இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் நிலைமை என்னவென அறிவார்களா? கொள்ளையைத் தொடர அனுமதிப்பார்களா? அரசியல்வாதிகள் தங்களுக்கான லாபத்தை பெற மக்கள் கல்வி கற்றிருப்பதைவிட கல்வி கற்காமலிருப்பதை அவர்களுக்கு ஆதாயமானது. அரசியல் இதுபோன்ற லாப ஆதாயங்களுக்காக உழைக்கின்றனரே தவிர, தங்களின் இதயத்தில் இருந்து வரும் குரல் எதனையும் கேட்பதில்லை.

     இந்தப்பிரச்சனை தொடரக்கூடாது. இது ஒரு மோசமான நிலைமையை ஏற்படுத்தும். பலரும் சரியான கல்வியைப்பெறாத போது, அவர்களுக்கு நாளை பொருத்தமான வேலை எப்படி கிடைக்கும்? கல்வியின்மையால் ஏற்படும் சீரழிவு மெல்ல மாறி வேலைகளைப் பெறுவதிலும் சில ஆண்டுகளில் ஏற்படும் அல்லது நாம் நமது குழந்தைகளை எப்போதும் வறுமையிலேயே வைத்திருக்கப்போகிறோமா?

     தீர்க்கமுடிகிற பிரச்சனைதான் இது. தொடக்க கல்வியானது, பெரிய அளவிலான அளவுகோலில் நன்நோக்கோடு, தொலைபேசி அல்லது மின்சாரம் போல உருவாக்கப்படவேண்டும். நவீனத் தொழில்நுட்பங்கள், சிந்தித்தல், நிலைப்பாடு, வெளிப்படுத்தல் போன்றவை பெரிய அளவிலான நம் நாட்டு மக்களுக்கு கற்பிக்க அவசியம். மின்சாரம் போல இதனை தனியாரிடம் ஒப்படைத்து  மானியம் தந்துகொண்டிருக்கும் போது, பல்வேறு வசதிகளைப் பெறுவது புத்திசாலித்தனமாக இருக்கும்.

     இது எப்படி இருப்பினும், கல்வி என்பது மதிப்பானதாக இருந்தால், மக்கள் அதற்கான தொகையை தருவார்கள்.

தனித்தன்மை கொண்ட பாடத்திட்டங்களோடும், திறமான புத்தகங்களையும் பள்ளிகள் பெற்றிருந்தால் மட்டுமே நவீன உலகோடு தொடர்புகொள்ள முடியும். கிராமத்து பள்ளிகளில் பெரிய நகரங்களில் இருக்கும்  இணையத்தொடர்புகளை விட அதிக வசதிகள் இருக்கவேண்டும். நமது நாட்டிலுள்ள தலைவர்களிடம் இத்தேவைகளை முன்வைக்க வேண்டும். அவர்களுக்கு இதில் அக்கறை பெரிதாக இருக்காது. குடிமக்களாகிய நாம், கண்டிப்பான ஆசிரியர்களாக மாறி, அவர்களுக்கு கடுமையான பல வீட்டுப்பாடங்களை செய்யவைக்க வேண்டும்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்