மலையாளத் திரைப்படங்களை விரும்புகிறீர்களா? - ஆசிப் மீரானின் நூல்





Image result for malayalam movies




மலையாளத் திரையோரம்

ஆசிப் மீரான்

தமிழ் அலை பதிப்பகம் 



மலையாள படங்களை பார்த்து ரசித்து ஆசிப் மீரான் எழுதிய கட்டுரைகள். நூல் என்றதும் புகழ்ந்து நெக்குருகி எழுதி விட்டார் என நினைக்காதீர்கள். புகழ்ச்சியும் உண்டு கழுவி ஊற்றுதலும் உண்டு. இதில் மலையாள இயக்குநர்கள் பற்றி சுய தம்பட்டம் பெருமை இருக்கிறது.

கலை, வணிகப்படங்களில், பரிசோதனை முயற்சிகளில் மலையாள நடிகர்கள் ஈகோ பார்க்காமல் ஈடுபடுவதை தன் பல்வேறு கட்டுரைகளில் பதிகிறார் மீரான். கூடவே தான் படங்கள் பார்ப்பதில் மலையாளத்தைத்தான் முதல் தேர்வாக கொள்வேன் என்கிறார்.

விருப்பு வெறுப்புகள்தானே படத்தை தீர்மானிக்கும். பத்திரிகையில் விமர்சனங்களை எழுதினாலும் கூட அது அந்த தனிநபரின் கருத்துக்களை உள்ளடக்கியதுதானே? இந்த நூலையும் நாம் ஆசிப் மீரானின் சினிமா அறிவோடு பொருத்திப் பார்க்கவேண்டும்.

இந்த நூல் மூலம் மலையாள திரையின் சிறப்பான இயக்குநர்கள், நடிகர்களை அறிய முடியும். அந்த வகையில் இந்த நூல் முக்கியமானது.

நூலின் இறுதியில் அவரைக் கவர்ந்த இயக்குநர்கள் பற்றிய குறிப்புகளையும் படங்களையும் கொடுத்திருக்கலாம். உதவியாக இருந்திருக்கும்.

மற்றபடி சினிமா பற்றிய ஜாலியான விமர்சனங்களை இந்த நூல் உள்ளடக்கியிருக்கிறது. மலையாள படங்களை எந்த படங்களைப் பார்ப்பது என தடுமாறுபவர்களுக்கு ஓரளவு தெளிவைத் தரும் என இந்நூலைச் சொல்லலாம்.

கோமாளிமேடை டீம்

நன்றி - தோழர் பாலபாரதி