உங்கள் லைஃப்ஸ்டைலை மாற்றும் ஆப்கள்!




Image result for moodflow app


லைஃப்ஸ்டைல் ஆப்ஸ்!


பாக்கெட் கோச்


தினசரி நீங்கள் மெசேஜ் அனுப்பும் பிற ஆப்களைப் போலவே இருக்கும். ஆனால் இதில் பல்வேறு டிப்ஸ்களை உங்களுக்கு மெசேஜ் போலவே தருகிறார்கள். இதில் உங்களுக்கு விரக்தி, மனச்சோர்வு இருந்தால் சரிசெய்ய உதவுகிறார்கள்.

டெசர்ட் ஐலேண்ட்

இது ஒரு சர்வே போலத்தான். நீங்கள் எந்த ஆப்பை எத்தனை முறை ஆன் செய்து என்ன வேலை பார்க்கிறீர்கள் என்பதை கண்டுபிடித்து டைம்ஸ் ஆப் இந்தியா போல சார்ட் போட்டு விளக்குகிறார்கள். இதிலிருந்து நமக்கு ஏற்படும் மனநிலை பாதிப்பை அடையாளம் காணலாம்.

ஸ்மைலிங் மைண்ட்

தியானம் செய்வதும் இன்று டிஜிட்டலாகி விட்டது. இந்த ஆப்பில் அதனைப் பார்ப்பதோடு அதிகாலையில் எழுந்து செய்தால் உங்கள் உடல்நலமும், மனநலமும் தேறுவதற்கு வாய்ப்புள்ளது.

மூட்ஃப்ளோ

உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் ஆப் இது. இதில் மனநிலை பற்றிய அறிக்கையைப் பெற்றால் உங்களது மனநிலையை மேம்படுத்தும் வாய்ப்பு உள்ளது.


நன்றி - ஸ்டஃப் இதழ்



பிரபலமான இடுகைகள்