உலக வல்லரசுகளின் செயற்கைக்கோள் போர்!
விண்வெளியில் செயற்கைக்கோள் போர்!
விண்வெளியிலுள்ள புவி வட்டப்பாதையில் பல்வேறு நாடுகளும் தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களை நிறுத்துவதற்காக போட்டியிட்டு வருகின்றன.
இன்று உலக நாடுகள், தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் போன்றவற்றையும் செயற்கைக்கோள் மூலம் கட்டுப்படுத்தி வருகின்றனர். நாட்டின் பல்வேறு துறைசார்ந்த வளர்ச்சியிலும் செயற்கைக்கோள்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதன் விளைவாக பல்வேறு நாடுகளும் விண்வெளியிலுள்ள புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த போட்டியிட்டு வருகின்றன. இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஐரோப்பா நாடுகள் முன்னிலையில் உள்ளன.
1978ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி மையம் நேவ்ஸ்டார் 1 என்ற ஜிபிஎஸ் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இதற்குப்பிறகு பல்வேறு நாடுகளும் ராணுவம், தகவல்தொடர்பு, விவசாயம் என பல்வேறு காரணங்களுக்காக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகின்றன.
அண்மையில், அமெரிக்க விமானப்படை தனது பிளாக் 3 செயற்கைக்கோள்களை மேம்படுத்த 4 பில்லியன் டாலர்களை செலவிட முடிவு செய்துள்ளது. ”விண்வெளியில் சரியான இடத்தில் செயற்கைக்கோள்களை நிறுத்துவதன் மூலம் நாட்டிலுள்ள பல்வேறு விஷயங்களை கட்டுப்படுத்த முடியும்” என்கிறார் இங்கிலாந்திலுள்ள ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நேவிகேஷன் அமைப்பின் இயக்குநரான ஜான் பாட்டில்.
சீனா, பெல்டூ எனும் தகவல் தொடர்பு அமைப்பை பெரும் பொருட்செலவில் உருவாக்கி வருகிறது. நீர்மூழ்கி கப்பல்கள் செய்தி பரிமாறிக்கொள்ள இந்த அமைப்பு உதவும் என சீன அரசு கூறியுள்ளது. ஐரோப்பிய யூனியன் கலிலீயோ எனும் அமைப்பை விண்ணில் நிறுவி இதன் சேவைகளை ஐரோப்பிய நாடுகள் பெற்றுக்கொள்ளும்படி நிறுவ உள்ளது. ரஷ்யா, குளோனாஸ் எனும் அமைப்பை விண்ணில் நிறுவ உள்ளது. எனவே விண்வெளியிலும் உலகநாடுகளின் போட்டி தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம்.
தகவல்:NS