தெரிஞ்சுக்கோ - தனிமவரிசை அட்டவணை!





Image result for periodic table




உலகில் பல்வேறு பொருட்களுக்கும் அடிப்படையான விஷயங்கள் என்ன? இந்து மதத்தில் பஞ்சபூதங்கள்தான் அனைத்துக்கும் அடிப்படை என்பார்கள். அதனை கிரேக்க ஆராய்ச்சியாளர்களும் கூட நம்பினார்கள். நிலம், நீர்,காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவைதான் அவை. இவற்றை உருவாக்க தேவையான பொருட்களும் உண்டுதானே? அவை இயற்கையில் பல்வேறு பொருட்களின் பகுதிப் பொருட்களாக உள்ளன. அவற்றைக் கண்டுபிடித்து வரிசைப்படுத்தி உள்ளனர். அவற்றைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.


1869ஆம் ஆண்டு டிமிட்ரி மெண்டலீஃப் தனிம வரிசை அட்டவணையை உருவாக்கியபோது அதில் இருந்த தனிமங்களின் எண்ணிக்கை 63. இன்று அந்த எண்ணிக்கை 118ஆக அதிகரித்துள்ளது.

இதில் உள்ள தனிமங்களில் 94 தனிமங்கள் இயற்கையாகவே பூமியில் கிடைக்கின்றன.

தனிம வரிசை அட்டவணையில் மனிதர்கள் உருவாக்கிய தனிமங்களாக 24 உள்ளன.

அட்டவணையில் உள்ள 30க்கும் மேற்பட்ட தனிமங்கள் மனிதர்களின் உடலிலேயே உள்ளன.

ஸ்மார்போனில் 70க்கும் மேற்பட்ட தனிமங்கள் உள்ளன. உலகில் 75 சதவீத ஹைட்ரஜன் நிறைந்துள்ளது.

நன்றி - க்வார்ட்ஸ்


பிரபலமான இடுகைகள்