பாக்டீரியாக்கள் பாதிப்பு ஏற்படுத்துமா?
மிஸ்டர் ரோனி
நம் உடல் செல்களை விட பாக்டீரியாக்கள் அதிகமாக உள்ளனவா?
அவை அளவில் சிறியன. என்பதால், உடலின் செல்களோடு ஒப்பிட்டால் 50 சதவீதம் இருக்கும். வெய்ஸ்மன் இன்ஸ்டிடியூட் செய்த ஆய்வில் இந்த உண்மை வெளியாகியுள்ளது. இதில் கவலைப்பட ஏதுமில்லை. டெட்டால், லைஃப் பாய் விளம்பரங்கள் பார்த்து பதறாதீர்கள். நன்மை, தீமை செய்யும் பாக்டீரியாக்கள் என நம் உடலில் அனைத்து கலந்தே இருக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது, பாக்டீரியாக்கள், வைரஸ் நம் உடலைத் தாக்குகின்றன.
உடல் தனி, பாக்டீரியாக்கள் தனி என்று நீங்கள் பிரித்துப்பார்க்கத் தேவையில்லை. அவை அனைத்தும் சேர்ந்துதான் மனித உடலாக உருவாகியிருக்கிறது.
நன்றி - பிபிசி