தியோ ஏஞ்சலோ பவுலோஸ் நேர்காணல்




தியோ ஏஞ்சலோ பவுலோஸ்














திரைத்தேர்வு மற்றும் கிராமத்தில் நிலத்தை விற்கும் உழவர்களை அழைக்கும்போது அவர்கள் ஒவ்வொருவரும் தரும் பதிலான பாரோன் –‘இங்கிருக்கிறேன்’ என்பதற்கும் தொடர்பிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

நிச்சயமாக. இரண்டு விஷயங்களிலும் இயந்திரத்தனமான பதிலை மனிதர்கள் கூறுகிறார்கள். அவர்கள் பொருட்கள் போல நடத்தப்படுகிறார்கள். ஒன்றில் வயதான நடிகர்கள் வேலை தேடுவது, இரண்டாவது கிராமத்தார்கள் தமது அடையாளமான நிலத்தை விற்பது என உள்ளது. இயக்குநர் இந்த இரு தருணங்களிலும் இவற்றை உள்வாங்கியபடி இருந்தாலும் அவற்றில் இடையூறு செய்யாததன் காரணம் முதியவர் உண்மையில் அவன் தந்தை என்பதை அவன் அறியாததே, உறுதி இல்லாததே காரணம் எனலாம்.

தனிப்பட்ட காட்சிகளிடையே ஏதாவது கருத்துகளின் எதிரொலி தங்களின் படத்தில் இருக்கிறதா?

ஆமாம். உதாரணத்திற்கு, எரிவாயு நிலையத்தை இருமுறை பார்க்கிறோம். ஒன்று பகலில் மற்றொன்றில் இரவில் ஒரே மாதிரியான கோணத்தில் ஒத்தது போல கேமரா நகர்ந்து பயணிக்கும். எரிவாயு நிலையமானது நகரம் மற்றும் கிராமத்திற்கு இடையே அமைந்துள்ளது. யாராவது ஒருவர் கிராமத்திற்குச் செல்லும்போது நான் எரிவாயு நிலையத்தை காட்ட விரும்புவேன் பாரீஸ், டெக்ஸாஸ் எனும் படத்தில் வெண்டர்ஸ் பயன்படுத்தியதற்கு எதிரான நீள்வட்ட பயிற்சி என்று என்னுடையதைக் கூறலாம்.

ஒரு உலகத்திலிருந்து மற்றொன்றுக்கு திடீரென மாறுவது என்பதால் கதாபாத்திரங்களிடையே ஏற்படும் முரண்பாடுகளை அடிக்கோடிடுகிறீர்களா?

ஆமாம். அதேதான்.

அதனை வேறுவிதமாகப் பார்க்கலாம். நுகர்வு சமூகம் முன்பு கடந்த கால மரபுகள், மதிப்புகள், ஆகியவை முன்னே நிற்கின்றன எனவும் கூறலாமா?

உண்மையான யதார்த்த உலகம் மற்றும் கனவுலகம் ஆகியவற்றின் முரண்பாடுகளின் கறைபடாத, தூய்மையான நினைவுகளால் மட்டும் உயிர் வாழ்கின்ற உலகம் ஒன்று உள்ளது இதனால்தான் வயதான மனிதன் தன் நிலத்தை விற்க மறுப்பது. இங்கே ஒரு வார்த்தையைக் காணலாம். வானத்தில் பனி போல அவர்கள் அதில் ஏதோ தொலைவாக செய்து கொண்டிருப்பார்கள் என்பது. இதன் அர்த்தம் தன் நினைவுகளின் சிறந்த பகுதிகளை அவர்கள் மற்றவற்றோடும் சேர்த்து விற்றுவிட்டார்கள் என்பதேயாகும்.

எதிரான தன்மைகளாக முன்நிற்கும் மற்றவற்றைப் பார்க்கலாம். இறுதிக்காட்சியில் சத்தமிட்டுக்கொண்டு இருக்கும் குழு ஒன்று கஃபேயில் நுழைகிறார்கள். புதிய தலைமுறையைச் சேர்ந்த கிரீக் மக்கள் தமது நினைவுகளிலிருந்து முழுமையாக விடுதலை ஆகாத போதும் அவர்களது எதிர்வினைகளை பார்த்து அமைதியாக இருக்கும்படி கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. இதுதான் நீங்கள் கூற விரும்பிய கருத்தா?

அக்காட்சி அதுபோன்ற தீர்மானத்தைக் கொண்டதல்ல. காவலர் இசையினை நிறுத்தச் சொல்வது என்பதைத் தாண்டி அதன் பின் தனியான எந்தக்காரணமும் அதில் இல்லை. நான் அக்காட்சியை எழுதும்போது இசையினைக் கேட்பவர்களின் மூலம் இசை மற்றவர்களுக்கு   மெல்ல சங்கடம் தரும் விதமாக அது மாறுகையில் எப்போதெல்லாம் காவலர் அந்த கஃபேயினுள் நுழைகிறாரோ அந்த தருணத்தில் அது நிறுத்தப்படுகிறது என்பதைக் காட்ட நினைத்தேன்.

ஒரு மனிதன் லாவெண்டரை விற்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?


படம் முழுக்க வாசனை திரவியம் குறித்த விஷயங்கள் வர வேண்டும் என நான் விரும்பினேன். வயதான மனிதன் பல முறை ‘சபிலோ மிலோ’ என்று கூறுவதை நாம் கேட்கிறோம். அதனை மொழிபெயர்த்தால் ‘அழுகிய ஆப்பிள்’ என்று வரும். ஆனால் நான் அதனை ‘உலர்ந்த ஆப்பிள்’ என்று மாற்றினேன். இந்த சொல் அதன் வாசனையை மட்டும் குறிப்பதல்ல அதன் ஒலியே கூட ஒரு உருவகமாக மாறியிருக்கிறது. ஒரு கட்டத்தில் வயதான மனிதன் இதனை ரஷ்யமொழியில் கூறுவார். ஒரு சொல் வெவ்வேறு மொழிகளில் மாற்றப்படும் போது அந்த வார்த்தைக்கு கனம் கூடுவதாக கருதுகிறேன்.