சிட்ரஸ் மணத்திற்கு உள்ள சக்தி!
எலுமிச்சைகள் ஆரம்ப காலம் தொட்டே வீடுகளை சுத்தப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றன. செம்பு பாத்திரங்களை சுத்தப்படுத்த எலுமிச்சை சாறும், மரச்சாமான்களை பளிச்சென மாற்ற எலுமிச்சை தோல்களும் பயன்படுகின்றன. இதன்காரணமாகவே, பாத்திரம் விளக்கும் விம் பார் முதல் குளியல் சோப்கள் வரை எலுமிச்சை பிரதானமாக மாறியது. அதன் வாசனை சுத்தத்தின் அடையாளமாக மாற்றப்பட்டது.
இன்று ஏராளமான சுத்தப்படுத்தும் பொருட்கள் லாவண்டர், மல்லிகை என வந்தாலும் எலுமிச்சை தனது இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு விட்டது. உண்மையில் சிட்ரஸ் மணம் என்பது சுத்தமாகிவிட்டதை நம் மனதில் உறுதியாக நம்ப வைக்கிறது என்றே கூறலாம்.