தீவிரவாத தாக்குதல்களை கணக்கு போட்டு தடுக்கலாமா?




45 years of terrorism


கணக்கு போட்டு தீவிரவாத தாக்குதல்களை குறைக்க முடியுமா? முடியும் என தீர்மானமாக பேசுகிறார் மியாமி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நீல் ஜான்சன். தொண்ணூறுகளில் கொலம்பியா சென்று அரசுக்கும் தீவிரவாத குழுக்களுக்குமான தாக்குதல்களை ஆராய்ந்து இந்த துணிச்சலான உண்மையை கண்டுபிடித்திருக்கிறார்.

“ செய்தி சேனல்களை பார்த்தபோது ஐந்து, இரண்டு, ஆறு என மாறுபட்ட எண்ணிக்கையில் இறப்புகள் நிகழ்ந்தன. எனவே அதனை வைத்து கிராப் ஒன்றை தயாரித்தோம்.” என்கிறார் ஜான்சன்.  பின்னர் பொருளாதார பேராசிரியர் மைக் ஸ்பாகட் கொலம்பியாவின் 20 ஆயிரம் தாக்குதல்களை ஆராய்ந்து கிராப்பினை செம்மை செய்திருக்கிறார்.

Can maths defeat terrorism? © Getty Images



கிராபின் ஒருமுனை குறைந்த தாக்குதல்களில் அதிக இறப்பு, அதிக தாக்குதல்களில் குறைந்த இறப்புகள் என இரண்டு தன்மையையும் சுட்டிக்காட்டுகிறது. இது அப்படியே இராக் நாட்டிற்கும் பொருந்துகிறது. இதனை பவர் லா என குறிப்பிடுகிறார்கள். இதன் மூலம் தீவிரவாத தாக்குதல்களை கணிக்க முடியுமா?  ”9/11 தாக்குதலில் 2,996 பேர் பலியாயினர். ஆனால் இதன் பலி அளவு 30 சதவிகிதம்  என்பதை வைத்து எப்போது அடுத்த தாக்குதல் நடைபெறும் எனவும் பலி எண்ணிக்கையும் கணிப்பது கஷ்டம்” என்கிறார் பேராசிரியர் க்ளாசெட்.

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவான சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த முயற்சித்தும் அதற்கு எந்தவித பயன்களும் கிடைக்கவில்லை. காரணம், அவர்கள் இன்னொரு பெயரில் உடனே வேறு கணக்கை தொடங்கி செயல்படுகின்றனர்.

நன்றி: பிபிசி சயின்ஸ் ஃபோகஸ் 

பிரபலமான இடுகைகள்