டெக்னாலஜி திருவிழா 2019
ஐஐடி மெட்ராஸில் நடைபெறும் சாஸ்ட்ரா 2019 நிகழ்வில் நம்பிக்கை தரும் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றில் சில.
U Farm
இந்த அமைப்பில் குறுக்குவெட்டாக காய்கறிகளை விதைத்து அறுவடை செய்யலாம். இதற்கு உரம் தேவையில்லை. நகரங்களுக்கு ஏற்றது.
Sepoy
செப்டிங் டேங்குகளை ஆராய்ந்து அதனை சுத்தப்படுத்துவதற்கான கருவி. மீன் எப்படி அழுக்குகளை உணவாக கொண்டு நீரை சுத்தப்படுத்துகிறதோ அதே டெக்னிக்தான் இங்கும் பயன்படுகிறது. கண்டுபிடிப்புகள் நிறைய வந்தாலும் அரசு அதனை கண்டறிந்து பயன்படுத்துவதில்தான் இருக்கிறது வெற்றி.
germ safe water tech
கிராமப்புறங்களில் பெரும்பாலும் கார்ப்பரேஷன் நீர் வழங்கப்பட்டாலும், ஆழ்துளைக்குழாய் மூலம் பெறும் தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள். அடிபம்ப் என்று குறிப்பிடுகிறார்களே அதுவேதான்,. இம்முறையில் நிலத்தடி நீரை சுத்திகரித்து பெறலாம். மும்பை கெமிக்கல் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டின் கண்டுபிடிப்பு இது.
ஸ்ட்ரைக்கர் என்ற டெக்னாலஜி பேட் அறிமுகமாகியுள்ளது. பேட்டிலுள்ள சென்சார்கள் மூலம் பந்து பேட்டில் எந்த இடத்தில் பட்டது, என்ன வேகத்தில், ஷாட் துல்லியம், கோணம் ஆகியவற்றை துல்லியமான தகவல்களாக பெறலாம். இதேபோல சென்சார் பந்தும் அறிமுகமாகியுள்ளது. மொத்தம் நான்கு நாட்கள் நடைபெறும் டெக்னாலஜி திருவிழா இது.