இறப்பு என்பது இயல்பானது!
இறப்பு என்பது சாதாரணமானது!
மரு. காத்தரின் மானிக்ஸ்
நான் முப்பது ஆண்டுகளாக பேலியேட்டிவ் துறையில் பணியாற்றி வருகிறேன். ஏறத்தாழ நோயாளிகளின் இறுதிக்கணங்களில் அவர்களின் இயல்பை, உயிர் பிரியும் கணத்தின் துயரத்தை கண்டிருக்கிறேன். இறப்பு என்பது நாம் பேச தயங்கும் உண்மை. நம்மைச் சுற்றியுள்ள டிவி, சினிமா என அனைத்தும் இறப்பை சோகம், துக்கம் என பெயர்மாற்றி மக்களின் மனங்களை கெடுத்துள்ளன.
நோய்கள் உடலின் தன்மையை மாற்றி ஆற்றலை குறைக்கின்றன. தூக்கம் மீண்டும் ஆற்றலைப் பெற உதவுகிறது. மீண்டும் நாம் எழுந்ததும் ஆற்றல் செலவாகத் தொடங்குகிறது. இதில் இறப்பு நிகழும்போது நாம் இழப்பது நிரந்தரமாக சுயநினைவு என்ற ஒரு தன்மையை மட்டுமே.
இறப்பில் கூடுதலாக நிகழ்வது, உள்ளே வரும் காற்று வெளியேறும் சக்தியை உடல் இழப்பதுதான். மெல்ல மூளையின் இயக்க ஆற்றல் குறைந்து எச்சில் மெல்ல தொண்டைக்குழியில் தேங்கும். இதன்விளைவாக மூக்கில் அவை வெளியேறும் வாய்ப்பு உள்ளது.
நன்றி:சயின்ஸ்போகஸ்