மிளகாய்க்கு அங்கீகாரம்!
பிட்ஸ்!
மிளகாய் சேவல்!
சீனாவின் லினி நகரில் 20 அடியில்
பிரமாண்ட சேவலை தனியார் ரிசார்ட் உருவாக்கியுள்ளது. பச்சை மற்றும் சிவப்பு நிற மிளகாய்களைப்
பயன்படுத்தி சேவலின் உடலும் சோளத்தின் மூலம் கால்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 200 ஆண்டுகளுக்கு
மேலாக லினி நகரின் வருவாய் ஆதாரம் மிளகாய் என்பதால் அதற்கு கௌரவ அங்கீகாரமாக மிளகாய்
சேவலை உருவாக்கியுள்ளனர். காரமான சேவல்!
கார்ட்டூன் கஃபே!
தென்கொரியாவிலுள்ள கஃபே, கறுப்பு-
வெள்ளை கார்ட்டூன் போல சுவர், நாற்காலிகள், உணவுகளை வடிவமைத்து உலகளவில் ட்ரெண்டிங்காகியுள்ளது.
“எங்களது உணவகத்தின் பெயரும், இன்டீரியரும் வித்தியாசமானது. கஃபேயில் சாப்பிடுபவர்கள்
அனைவரும் போட்டோ எடுக்காமல் செல்வதில்லை ” என்கிறார் கஃபே மேலாளரான ஜே.எஸ். லீ.
விநோத
விளம்பரம்!
சிமெண்ட் கல்யாண உடை!
இணையத்தில் சீனாவைச் சேர்ந்த இளம்பெண் கல்யாண கவுன் அணிந்து நடந்து செல்லும்
விநோத வீடியோ மெகா ஹிட். இதில் மிராக்கிள்,
கல்யாண கவுன், 40 சிமெண்ட் பைகளால் தைக்கப்பட்டுள்ளது என்பதே. டான் லிலியின் கண்களுக்கு
சிமெண்ட் பைகளைப் பார்த்ததும் கலையார்வம் பீறிட்டதே இம்முயற்சிக்கு காரணமாம். சிமெண்ட்
சிலை!
நான் தீவிரவாதி!
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த புற்றுநோய்
நோயாளி ஸ்டீவென்சன், அமெரிக்காவுக்கு செல்வதற்கு கறாராக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது நீங்கள் தீவிரவாதியா? என்று கேள்வி கேட்ட
பெட்டியில் ஸ்டீவன்சன் அதிரடியாக டிக் மார்க் செய்ததுதான் பிரச்னை. அமெரிக்க தூதரகத்தில்
தன் தவறுக்கு மன்னிப்பு கோரியும் விசா அதிகாரிகள் மறுத்ததால் ஸ்டீவன்சனுக்கு நஷ்டம்
ரூ. 75,589. “அப்ளிகேஷனில் செய்த தவறின் விளைவு கெட்ட கனவாக என்னை துரத்துகிறது” என
புலம்பிவருகிறார் ஸ்டீவன்சன்.