பெண்களை அரிஸ்டாட்டில் ஏன் வெறுத்தார்?
வரலாற்று துளிகள்!
ஆய்வுத்தந்தை!
பெலோபொனேசியன் போரை ஆவணப்படுத்திய
கிரேக்க அறிஞர் துசைடிடெஸ்(கி.மு460-400), அறிவியல் வரலாறுகளின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
அழுத்தமான ஆராய்ச்சி தரவுகள், சாட்சிகளை பதிவு செய்த துசைடிடெஸ் தனது மெலியன் டயலாக்
எனும் உலகநாடுகளுடான உறவு குறித்த தியரியும் பிரசித்தமானது.
களமாடும் களிறு!
பைரிக் போர்களில்(கி.மு
280-275) கிரேக்க நாடு, ரோமானிய ராணுவத்தை எதிர்க்க முதல்முறையாக பயிற்றுவிக்கப்பட்ட
யானையைப் பயன்படுத்தியது. கி.மு 331 இல் பெர்சியர்கள், மகத மன்னர் நந்தா, கங்காரிதாய்
ஆகியோர் 6 ஆயிரம் வரையிலான போர்யானைகளை போரில் கிரேக்க மன்னர் அலெக்ஸாண்டருக்கு எதிராக பயன்படுத்தினர்.
முழுமையடையாத ஆண்!
தத்துவவியலாளர் அரிஸ்டாட்டில்,
பெண்களை முழுமையடையாத ஆண் என கருதினார். அன்று கிரேக்கத்தில் பெண் ஆணுக்கு சமமில்லாத
தாழ்வானவர்களாக கருதப்பட்டனர்.
அலெக்ஸாண்டரின் பிரதி!
நாம் இன்று பார்க்கும் அலெக்ஸாண்டரின்
சிற்பத்தை(Azara herm) உருவாக்கிய கலைஞர், லைசிபஸ். அலெக்ஸாண்டரை பிரதிபலிக்கும் இச்சிலை
பிரான்சின் பாரிசில் உள்ளது.