மக்களின் உணர்ச்சி தான் எனக்கு முக்கியம்! - ராஜமௌலி, தெலுங்கு சினிமா இயக்குநர்

 










ராஜமௌலி
தெலுங்கு சினிமா இயக்குநர்


கருத்தியல் ரீதியாக வலதுசாரிகளுக்கு ஆதரவாக படமெடுப்பவர். காட்சிரீதியாக பார்வையாளர்களுக்கு நிறைவான அனுபவம் தருபவர். பாகுபலி மூலம் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் தெரிய வந்தவர். அதற்குமுன்னர் தெலுங்கில் இயக்கிய ஸ்டூடண்ட் நம்பர் 1, சிம்மாத்ரி, எமதொங்கா, விக்ரமார்குடு, சத்ரபதி என அனைத்து படங்களிலும் ஏதாவதொரு புது விஷயத்தை முயற்சி செய்திருப்பதை பார்த்தாலே அறியலாம். 

நீங்கள் தெலுங்கு மொழியில் படம் எடுக்கிறீர்கள். ஆனால் அதை இந்தி மக்கள் வரவேற்கிறார்களே?

நான் இந்தி, தெலுங்கு என எதையும் வேறுபடுத்தி பார்க்கவில்லை. காட்சிரீதியாக தான் நான் கதை சொல்லுகிறேன். மொழி ரீதியாக அல்ல. மொழி என்பது தகவல் தொடர்புக்கானது தான். அதை நடிகர்கள் பேசுகிறார்கள். எனது படங்களில் பெரும்பகுதி தகவல் தொடர்பு காட்சி ரீதியாகவே நடைபெறுகிறது. மொழியை நான் தடையாக நினைக்கவில்லை. 

தென்னிந்தியப் படங்கள் இந்தி திரையுலகில் வெற்றி பெற காரணம், அவர்கள் சரியான முறையில் படங்களை எடுக்காததே காரணம். வெற்றிக்கான காரணம் என நம்மை நாமே கூறிக்கொள்ள முடியாது. 90களில் இந்தி திரையுலகம் அற்புதமாக கதை சொல்லும் ஏராளமான படங்களைக் கொண்டிருந்தனர். தற்போது பெருமளவு மக்கள் சண்டைப்படங்களை அதிகளவு விரும்புகிறார்கள்.  

வணிகம், கிரியேட்டிவிட்டி என இரண்டுக்கும் சமநிலையைப் பேணுகிறீர்களா?

படத்தின் பட்ஜெட் பற்றி இயக்குநரும், தயாரிப்பாளரும் சேர்ந்துதான் கலந்து பேசி முடிவு செய்யவேண்டும். படத்தின் வணிகம் பற்றி அறிந்தால் தான், படத்தின் இயக்குநர் என்ன, எப்படி எடுக்கவேண்டும் என தெளிவாக படத்தை எடுக்க முடியும். கலையை நான் அதன் போக்கில் செல்லவிட்டு வணிகத்தை பின்தொடர அனுமதிக்கிறேன். 

ரணம், ரத்தம், ரௌத்திரம் படத்தை டப் செய்ய எப்போது முடிவெடுத்தீர்கள்?

எனது படத்தை அதிகளவு மக்கள் பார்க்கவேண்டுமென நினைத்தேன். எனவே, அதை டப் செய்தால் மக்கள் அதை பார்க்க ஆர்வமாக வருவார்கள் என நினைத்தேன். எனது படத்தை நான் ஐந்து மொழிகளில் டப் செய்தேன். இதனால் படத்திற்கு வருமானம் கூடியது. பாகுபலி படத்திற்கு பிறகு ட்ரிபிள் ஆர் படத்திற்கு உத்தரப்பிரதேசத்தில் வரவேற்பு கிடைக்கும் என நம்பியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. 

இந்தி டப்பிங் நன்றாக போவதால், படத்தை வேறுமொழிகளில் ரீமேக் செய்யும் அவசியம் குறைகிறதா?

நான் தெலுங்கில் மரியாத ராமண்ணா என்ற படத்தை எடுத்தேன். அந்த கதை எனக்குப் பிடித்திருந்தது. இதை பிற மொழிகளில் ரீமேக் செய்யலாம். அதற்கான வாய்ப்பு இருந்தது. 

பான் இந்தியா படத்திற்கு கதை அனைவருக்கும் பொருந்தும்படி இருப்பது அவசியம். அப்படி இல்லாதபோது அதனை ஒரே மொழியில் எடுக்கலாம். இந்திய திரையுலகில் அதிக பட்ஜெட்டில் படம் எடுத்த பிறகு, அதை இன்னொரு மொழியில் ரீமேக் செய்வதில் பெரிய பயன் இருப்பதாக தெரியவில்லை. 

உங்கள் இயல்புக்கும், நீங்கள் எடுக்கும் திரைப்படங்களுக்கும் தொடர்பே இல்லையே? 

என்னுடைய கருத்து, சிந்தனை, வாழ்க்கை முறை ஆகியவை தொழில் வாழ்க்கையில் இருந்து வேறுபட்டவை. நான் அப்படி இருக்குமாறு பிரித்து வைத்திருக்கிறேன். கதைசொல்லும் முறையில் என்னுடைய கருத்தை, பாத்திரத்தை திணிக்க விரும்புவதில்லை. அன்னமய்யா என்ற தெலுங்குப்படத்தைப் பார்த்து இறுதிப்பகுதியில் நான் அழுதுவிட்டேன். நான் கடவுளை நம்புவதில்லை என்றாலும் கூட உணர்ச்சிகரமான தன்மை என்னை அழ வைத்தது. கதையில் உள்ள உணர்ச்சிகரமான தன்மை மக்களை கதையோடு ஒட்ட வைக்கும். அதை நான் முக்கியமாக நினைக்கிறேன். 


பிஸினஸ் டுடே இந்தியா - ஆக. 7, 2022















கருத்துகள்