வறுமையில் முந்தும் மாநிலம் எது?
வறுமைப்பட்டியலில்
இந்தியா!
உலகில் வளர்ந்து
வரும்
102 நாடுகளில் வறுமை அளவில் இந்தியா 26 வது இடம்
பெற்றுள்ளது. 2005-2016 காலகட்டத்தில் இந்தியாவின் வறுமை அளவு
55%-21% குறைந்துள்ளது.
வறுமை அளவை கல்வி, சுகாதாரம்,
வாழும் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட்டு India’s
Multidimensional Poverty (MDP) எனும் வறுமை கணக்கீடு தயாரிக்கப்படுகிறது.
கேரளா(1%), தமிழ்நாடு(6%), கர்நாடகா(11%), தெலுங்கானா(14%), ஆ்ந்திரா(13%) என வறுமை விகிதம் குறைந்துள்ளது.
இந்தியாவின் தேசிய சராசரி 21% என்றால் அதில் தென்னிந்தியாவின்
பங்கு 9% ஆக உள்ளது. வட இந்தியாவில் ராஜஸ்தான்,
மத்தியப்பிரதேசம், அசாம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய வறிய மாநிலங்களில்
பீகார் வறுமை விகிதத்தில்(43%) பெற்று முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவில் மொத்தம் 640 மாவட்டங்கள் வறுமையான
சூழலில் இன்னும் தவித்து வருகின்றன என எம்டிபி அறிக்கை தகவல் சுட்டிக்காட்டுகிறது.