உலகை மிஞ்சும் இத்தாலி டாக்டர்கள்!







இத்தாலி டாக்டர்களின் கெட்டபழக்கம்!





ரோமிலுள்ள சபியென்சா பல்கலைக்கழகத்தில் புகைப்பிடிப்பதன் தீமைகளை விளக்கிய பேராசிரியர் கியுஸெப்பெ லாடொரி, இப்பிரச்னைக்கு தீர்வுகாண பிராக்டிக்கலாக முயற்சித்து வருகிறார். இத்தாலியில் 50 சதவிகித மருத்துவர்கள் புகையிலைக்கு அடிமையாக உள்ளனர்.இந்த அளவு பொதுமக்களின் அளவை விட அதிகம். "மாணவர்களின் புகைப்பிடிக்கும் பழக்கம் விரக்தி தருகிறது. வகுப்பு முடிந்தவுடன் புகைப்பிடிக்க தொடங்கிவிடுகிறார்கள்" என்கிறார் லா டொரி வருத்தம் தோய்ந்த குரலில்.


மருத்துவ உடை அணிந்தபடியே நர்ஸ்(50%), மருத்துவர்கள்(34%) சிகரெட் புகைத்தபடி நிற்கும் காட்சியை இத்தாலியில் சாதாரணமாக பார்க்கமுடியும்."பொதுமக்களின் 22% என்ற விகிதத்தை விட இது அதிகரித்து செல்வது ஆபத்து" என்கிறார் புகையிலை ஆராய்ச்சியாளர் கியுஸெப்பெ கொரினி. அமெரிக்காவில் 12 சதவிகித நர்சுகளும், 2 சதவிகித மருத்துவர்களும் புகைக்கின்றனர். மருத்துவ படிப்பு தரும் மன அழுத்தமே புகைப்பிடிக்கும் பழக்கம் தொற்ற முக்கியக்காரணம். ஐரோப்பாவிலேயே இத்தாலியில் டீன்ஏஜ் பருவத்தினர் அதிகளவு மது மற்றும் புகையிலையை பயன்படுத்துகின்றனர்(ஆண்கள் 35%, பெண்கள் 40%). 2005ஆம் ஆண்டு பொது இடங்களிலும் புகைக்கவும் மைனர்களுக்கு புகையிலையை விற்பதையும் தடை செய்து அரசு சட்டமியற்றி நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது