சீனா நிலப்பரப்பு ரீதியான அரசியலில் தீவிரம் காட்டி வருகிறது! - டிஎஸ் ஹூடா, வடக்குப்பகுதி ராணுவத் தலைவர்
tibet.net |
மொழிபெயர்ப்பு நேர்காணல்
கடந்த 2017ஆம் ஆண்டு சீனப்படைகள்
டோக்லாம் பகுதியில் திரண்டு வந்து நின்று இந்தியாவுக்கு தொல்லை தந்தது. தற்போது அதேபோன்ற
நிலைமை மீண்டும் உருவாகியிருக்கிறது. மேலும் சீனா தன்னுடைய செல்வாக்கினால் நேபாள நாட்டையும்
இந்தியாவிற்கு எதிராக தூண்டிவிட்டு வருகிறது.
டி.எஸ். ஹூடா, வடக்குப்பகுதி ராணுவப்பிரிவு தலைவர்
நேபாளம் திடீரென இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு, எடுக்க
என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
இந்தியாவிற்கு அருகிலுள்ள
நாடுகள் அதற்கு எதிராக பேசவும் செயல்படவும் ஒரே காரணம்தான் இருக்கமுடியும். சீனாதான்
அதன் பின்னணியில் இருக்கிறது. நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் கலபானி என்ற இடம் தொடர்பான
பிரச்னை இன்று தொடங்கியதல்ல. முன்பிருந்தே இருக்கிறது. இதை கலாசார, வரலாற்று தொடர்பு
கொண்டு நேபாளத்துடன் இந்தியா பேசித்தீர்த்துக்கொண்டிருக்க முடியும். ஆனால் சீனா மறைமுகமாக
அழுத்தம் கொடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவைக் கெடுக்க முயல்கிறது.
ஜின்பிங், போருக்கு தயாராகுங்கள் என்று தன் நாட்டு ராணுவத்திற்கு
அழைப்பு விடுத்திருக்கிறார். இது இந்தியாவில் வாழும் சீனர்களை வெளியேறுங்கள் என்று மறைமுகமாக கூறுகிறார்
என்று சொல்ல முடியுமா?
சீன அதிபர் தனது குடிமக்களை
இந்தியாவில் இருந்து வெளியேறச்சொல்ல இப்படி சொல்லியிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.
அமெரிக்கா – சீனா நாடுகளிடையே வணிகரீதியான பனிப்போர் நடந்து வருகிறது. இந்த நேரத்தில்
அவர் இப்படி சொல்லியிருப்பார் என்று நம்ப முடியவில்லை. ஆனால் சீனா ராணுவத்தை தயாராக
இருங்கள் என்று கூறுவது உலக நாடுகளிடையே நிலப்பரப்பு சார்ந்த போர் விரைவில் நடக்கவிருக்கிறது
என்ற தகவலையே தெரிவிக்கிறது.
பேச்சுவார்த்தைகள் இப்போது பயனளிக்கும் என்று நினைக்கிறீர்களா?
நிச்சயமாக. பேச்சுவார்த்தைகள்
எப்போது இரு நாடுகளிடையே சிறப்பாக பயனளிக்கும் வழிமுறை. இருநாட்டு ராணுவங்களும் நேருக்கு
நேர் போர்புரிவதோ அல்லது இருநாட்டு ராணுவத்தலைவர்களும் சந்திப்பதை விட அரசியல் பிரதிநிதிகளின்
பேச்சுவார்த்தை சிறப்பாக பயனளிக்கும். சிறிது காலம் நீண்டாலும் கூட இதுவே பயனளிக்கும்
வழிமுறை என்று நினைக்கிறேன்.
2017ஆம்ஆண்டு நடந்த சீனப்படைகளின் முற்றுகைக்கும், இப்போது
நடந்த ஆக்ரோஷ ராணுவப்படைகளின் நடவடிக்கைகளுக்கும் என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள்?
டோக்லாம் எல்லைப்பகுதி சில
ஆண்டுகளாக இருநாட்டு ராணுவத்திற்கும் பெரிய சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. சீன எல்லைப்பகுதியோரம்
சாலைகளை அமைத்து வருகிறது. இது இந்தியாவிற்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் இருநாட்டு
அரசும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும்.
கடந்த மாதம் சீனப்படைகள்
லடாக், சிக்கிம் அருகே பிரச்னை செய்தார்கள். இப்போது டோக்லாமில் சிக்கலை ஏற்படுத்துகிறார்கள்.
என்ன காரணம்?
சீனாவின் செயல்பாடுகளை பார்த்தால்
அவர்கள் இந்தியாவை அழுத்தம் செய்ய முயல்கிறார்கள் என்று படுகிறது. சீனா உலகளவிலான அழுத்தத்தை
இதன் மூலம் குறைத்துக்கொள்ளவும். நிலப்பரப்பு ரீதியான அரசியலிலும் ஆக்ரோஷமாக ஈடுபட்டு
வருகிறது. அவர்கள் ராணுவரீதியான நடவடிக்கைகள் எடுக்க இந்தியாவை தூண்டும் செயல்பாடுகளை
கடந்த காலத்திலும் செய்திருக்கிறார்கள். ஆனால் அவை வெற்றி பெறவில்லை. போர்தான் முடிவு
என அவர்கள் தீர்மானித்தால் விளைவுகள் இருநாட்டிற்கும் ஆபத்தானதாகவே இருக்கும்.
ஆங்கிலத்தில்: அஜய் சுரா
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக