ஒப்பந்தங்கள் நிறைவடைந்ததால் ஊழியர்களை கழற்றிவிடும் பிபிஓ நிறுவனங்கள்! - பறக்குது பிங்க் ஸ்லிப்புகள்
பறக்குது பிங்க் சிலிப்புகள் – அதிகரிக்கும் வேலையிழப்புகள்
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஆங்கிலத்தில்: ஆதித்தியா எம்எஸ், சௌம்யா மணி
சென்னையைச் சேர்ந்த தொழில்
அமைப்பு ஒன்று, இந்தியா முழுக்க உள்ள சிறு குறு தொழிலகங்கள் 50 சதவீதம் மூடும் நிலையில்
உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் வாடகை மற்றும் சம்பளம் தரமுடியாமல்
தடுமாற்றத்தில் உள்ளன.
சிறுகுறு தொழிலகங்கள் அல்லாமல்,
தகவல்தொடர்புத் துறை சார்ந்தும் வேலையிழப்புகள் தொடங்கியுள்ளன. திருச்சியைச் சேர்ந்த
தகவல்தொடர்புத்துறை நிறுவனம் 300 பேர்களை தற்போது வேலைநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்வி டிஜிகனெக்ட் என்ற நிறுவனம், இந்த சர்ச்சையில் மாட்டியுள்ளது. ஏர்டெல் நிறுவனம்
இந்த நிறுவனத்திற்கு கொடுத்த ஒப்பந்தம் முடிவடைந்ததால் இப்படியொரு முடிவை எடுத்துள்ளது.
திடீரென வேலையை விட்டு நீக்கியதால்
கோபமுற்ற தொழிலாளர்கள் விளக்கம் கேட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். மே மாத சம்பளம் வழங்காததும்,
நோட்டீஸ் காலம் முடிவடைவதற்கு முன்னமே பணியாளர்களை நீக்கியதும் பணியாளர்களை கோபத்தில்
தள்ளியுள்ளது. கோவிட் -19 நோய்த்தொற்று காலத்தில் திடீரென வேலையை விட்டு நீக்கினால்
என்ன செய்வோம் என கண்கலங்கியபடி கேட்கிறார்கள் இந்நிறுவன பணியாளர்கள்.
இந்த நிறுவனம் மட்டுமல்லாது
தமிழகம் முழுக்க பல்வேறு நிறுவனங்களில் வேலையிழப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்
-19 நோய்த்தொற்று காரணமாக, பலருக்கும் வேலையை விட்டு நீக்கியுள்ள தகவலை மின்னஞ்சல்களில்
அனுப்பி வைத்திருக்கிறது நிறுவனங்கள்.
திருச்சியிலுள்ள பல்வேறு
பிபிஓ நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்களுக்கான திட்டங்களை வடிவமைத்து தந்து வருகின்றன.
அமெரிக்க நிறுவனங்கள் குறிப்பிட்ட திட்டங்களை முடித்துவிட்டால், அதற்கு மேலும் பணியாளர்களை
வைத்து சம்பளம் கொடுப்பது பிபிஓ நிறுவனங்களுக்கு கடினமான ஒன்று என்பதை நிறுவனத் தரப்பில்
சொல்கிறார்கள். இதில் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையால் பலருக்கும் வேலை செய்யவில்லை
என்று கருதப்பட்டு மே மாத சம்பளம் வழங்கப்படவில்லை. சிலருக்கு மட்டும் இந்த சம்பளம்
கொடுக்கப்பட்டுள்ளது.
சிறுகுறு தொழிலகங்களிலும்
பணியாளர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைத்துள்ளனர். இந்த வேலையிழப்பு பத்திரிகை
துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி அந்திமழை இதழில் கருத்து தெரிவித்துள்ள
மாலன் நாராயணன், “தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்கும்போது பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை
குறைவது இயல்பானதுதான். குமுதம் வார இதழ் ஐந்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றபோது
அங்கு ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர்களின் எண்ணிக்கை ஐந்துதான். ஆனந்த விகடனில் இதற்கு
மாறாக ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்னை ஆச்சரியப்படுத்தியது” என்றார்.
கருத்துகள்
கருத்துரையிடுக