உடை, உணவு, வாழ்க்கை என அனைத்திலும் மிதமிஞ்சிய போக்கு ஆபத்தானது! - வந்தனா சிவா


 



Adult, Bag, Bags, Buy, Buyer, Consumer, Customer, Cute



பூமியும் மக்களின் நுகர்வும்!

இன்று ஆடைகளை அணியும் நாகரிகம் என்பது வேகமாகிவிட்டது. இதனால் ஆடைகள் உடுத்தும்படியாகவே இருந்தாலும் கூட காலத்திற்கேற்ப இல்லை என்று சொல்லி நிறைய ஆடைகளை மக்கள் வாங்கிவருகின்றனர். சிறப்பங்காடிகளும் உடைகளின் விலையை தள்ளுபடி விலையில் விற்றுத்தீர்க்க அவசரம் காட்டுகின்றன. இதன் விளைவாக, ஏராளமான துணிகள் அதன் பயன்பாடு முடிவற்கு முன்னரே நிலத்தில் குப்பையாக சேர்கின்றன.

இதற்கடுத்து தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உணவுபற்றி பார்ப்போம். அடிப்படையில் ஒரு யூனிட் அளவுக்கு நாம் இயற்கை ஆதாரங்களைப் பயன்படுத்தினால் பத்துமடங்கு ஆற்றலை இந்த உணவுகள் தரவேண்டும். தொழிற்சாலைகள் மூலமாக தயாரிக்கப்படும் உணவுவகைகள் பத்து யூனிட் அளவுக்கான இயற்கை ஆதாரங்களையும் சக்தியையும் பயன்படுத்துகின்றனர. பதிலாக எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லாத உணவை உருவாக்குகின்றன. இவற்றை நாம் போலி உணவு என்று கூறலாம்.

பொதுமுடக்க காலம் நமக்கு அவசியமான விஷயங்களை வாங்குவது பற்றிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்குலகில் உள்ள ஒருமுறை பயன்படுத்தி எறியும் கலாசாரம் இந்தியாவுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இது சூழலுக்கும், பூமியின் மைந்தர்களாகிய நமக்கும் பெரிய ஆபத்தை ஏற்படுத்துபவை. எனவே நமக்குத் தேவையான பொருட்களை மட்டுமே தேடி வாங்கவேண்டும். பிராண்டுகளின் பின்னே செல்லாதீர்கள். அவை நமக்கு மட்டுமல்ல பூமிக்கும் நிகர நஷ்டத்தையே ஏற்படுத்தும்.

இயற்கை ஆதாரங்களை தேவைக்குப் பயன்படுத்துவது என்பதைக் கடந்து பேராசை கொண்ட பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்துவருகிறோம். இதனால் கட்டுப்பாடற்ற வளர்ச்சி சூழலை மலட்டுத்தன்மையடைய வைத்து பெருந்தொற்று போன்ற பிரச்னைகளை உருவாக்குகிறது. சார்ஸ், மெர்ஸ், எபோலா ஆகிய நோய்த்தொற்றுகள் ஏற்படக் காரணம், பூமியிலுள்ள தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் இருப்பை மனிதர்களாகிய நாம் நிராகரித்ததுதான். இதைப்பற்றிய கவனத்துடன் நாம் வாழவில்லையென்றால் நமது வாழ்க்கையும் விரைவில் முடிவுக்கு வந்துவிடும்

ஆங்கிலத்தில்: வந்தனா சிவா
நன்றி: டைம்ஸ் எவோக்


கருத்துகள்