மக்களிடம் கொடுப்பதை விட தொழில்துறைக்கு வங்கிகள் மூலம் நிதி வழங்குவது சிறந்தது!





No Money, Poor, Money, No, Crisis, Poverty, Debt, Empty

மொழிபெயர்ப்பு நேர்காணல்

ராஜீவ்குமார், நிதி ஆயோக் துணைத்தலைவர்

நன்றி: தி இந்து ஆங்கிலம்

ஆங்கிலத்தில்: யுதிகா பார்க்கவா

மத்திய நிதியமைச்சகம் பொருளாதாரத்திற்கான நிதி ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது. இதைப்பற்றிய உங்களது கருத்து?

நாங்கள் மக்களிடம் நேரடியாக பணத்தை தராமல் அதனை வங்கிகள் மூலம் தொழில்நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்திருக்கிறோம். இம்முறையில் தொழில்நிறுவனங்களுக்கு உள்ள முதலீடு சார்ந்த பிரச்னைகள் தீரும். இதன் வழியாக தொழில்நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டால் தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைக்கும். இவர்களின் மூலமாக இந்திய பொருளாதாரம் ஊக்கம் பெறும். இதன் காரணமாகவே, இந்திய அரசு ஹெலிகாப்டர் மணி கருத்தை பின்பற்றவில்லை. நாங்கள் இந்த வகையில் செயல்படுவதன் மூலம் மெதுவாக என்றாலும் சரியான தொழில்வளர்ச்சி ஏற்படும் என்று நம்புகிறோம்.

நிதி ஊக்கத்தொகை பற்றி எந்த துறையிலும் மகிழ்ச்சிகரமான எதிர்வினைகள் இல்லையே.. குறிப்பாக சுற்றுலா, மோட்டார் வாகனத்துறை ஆகியவற்றில் எதிர்மறையாக விமர்சனங்கள் அல்லவா வருகிறது?

நிதி அமைச்சகம் அறிவித்த நிதி ஊக்கத்தொகை கொள்கைப்படி, சிறுகுறு தொழில்களின் கீழ்தான் ஹோட்டல், விடுதி வணிகம் வருகிறது. அவர்கள் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வசதிகளைப் பெற்று வளர முடியுமே? அப்படியும் இதில் எதிர்மறையாக கருத்துகள் சிலருக்கு ஏற்பட்டால், அதனை அமைச்சகத்திற்கு தெரியப்படுத்தலாம். அவர்கள் துறைசார்ந்த நிதி ஊக்கத்தொகை திட்டத்தை வழங்குவதற்கு தயாராக இருக்கிறநார்கள்.

பொருளாதாரத்தைப் பற்றிய உங்களது கருத்து என்ன?

பொருளாதார  ஊக்கத் திட்டங்களை நம்பிக்கையுடன் அரசு மக்களுக்கு அறிவித்திருக்கிறது. பெருந்தொற்று காலகட்டம் அனைத்து துறையினருக்கும் சவாலாகவே இருக்கிறது. இதில் நான் தனியாக கருத்துகளை சொல்ல ஏதுமில்லை.

விரைவில் பொருளாதாரம் மீளும் என்று நம்புகிறீர்களா?

பொருளாதாரம் மீள்வதில் வைரஸ் பாதிப்பு குறைவதும், உலக நாடுகளின் பொருளாதார மீட்சியும் சம்பந்தப்பட்டுள்ளது. தீபாவளி, தசரா காலத்தில் பொருளாதாரம் மீளமுடியும் என்று நம்புகிறேன்.

பெருந்தொற்று காரணமாக பல்வேறு துறைகளில் ஏராளமான வேலையிழப்புகள் நடந்துவருகின்றன?

பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்போல. இப்போது பெருந்தொற்று காரணமாக தொழில்துறை இயல்புக்கு மீள போராடிவருகிறது. இதன்காரணமாக தற்காலிகமாக வேலைவாய்ப்புகள் தட்டுப்பாடு ஆனாலும், பணியாளர்கள் நீக்கப்பட்டாலும் விரைவில் நிலைமை மாறும். மத்திய அரசு இதற்காகத்தான் காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை கொண்டுள்ளது. மேலும் ஓய்வூதிய திட்டத்திலும் நிறைய பலன்களை பணியாளர்களுக்கு அரசு வழங்க உள்ளது. விவசாயத்துறையிலும், விற்பனைத்துறையிலும் நிறைய சீர்திருத்தங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. இவற்றிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

முன்னாள் நிதியமைச்சர் பி. சிதம்பரம், மக்களின் கைகளில் பணத்தை கொடுக்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளாரே?

மக்களின் ஜன்தன் வங்கிக்கணக்குகள் வழியாக அரசு பெண்களுக்கு பணம் வழங்கியுள்ளது. இந்தவகையில் 20 கோடி பெண்கள் பயன்பெற்றுள்ளனர். காந்திகிராமப்புற வேலைவாய்ப்பு, பிஎம் கிஸான் யோஜனா ஆகிய திட்டங்கள் மூலமாக மக்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தனது செயல்பாடுகள் வழியாக பெருந்தொற்று கால சூழ்நிலையை திறம்பட சமாளித்து வருகிறது.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்