சிறப்பான உணவை சமைக்கும் அமெரிக்க மாடல் பெண்! கிறிஸி டெய்கன்
கிறிஸி
டெய்கன்
அமெரிக்காவைச்
சேர்ந்த மாடல். 34 வயதாகும் இவர் அமெரிக்காவில் உள்ள உடாவில் பிறந்தவர். இவரை நான்
ஆன் தி டேபிள் என்ற எனது நிகழ்ச்சியில் சந்தித்தேன். இந்த நிகழ்ச்சி, சமையல் செய்தபடி
குறிப்பிட்ட பிரபலத்திடம் உரையாடுவது போல நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. எனக்கு உணவு பற்றி நல்லது கெட்டது என்ற கருத்து தீவிரமாக இருந்தது.
கிறிஸி என்ன சமைப்பார் என்று எனக்குத் தெரியாது. நார்வேயைச் சேர்ந்த அப்பா, தாய்லாந்தைச்
சேர்ந்த அம்மா என காக்டெய்ல் கலவையான கிறிஸி அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவர் சமைத்த
உணவுவகை உண்மையில் என்னை ஆச்சரியப்படுத்தியது. இரு கலாசாரங்களின் கலவையில் உணவு வகைகளை
தயாரிக்க கற்றிருந்தார். அதுமட்டுமன்றி, அதுபற்றிய உணவு நூல் ஒன்றையும் எழுதியிருந்தார்.
அவை மற்றொரு உணவுநூலாக அமையும் தலைவிதியைப் பெறவில்லை. அந்த உணவு வகைகளை நீங்கள் மீண்டும்
மீண்டும் சமைத்து சாப்பிடும் வகையில் அவை உருவாக்கப்பட்டிருந்தன. அமெரிக்காவில் மதிக்கப்படும்
மாடலாக இருந்தவர், என்னோடு நிகழ்ச்சியில் இருந்தவர் தன் இயல்பிலேயே இருந்தார். பல்வேறு
விஷயங்கள் பற்றிய கருத்துகளையும் கொண்டிருந்தார். எனக்கு அவர் அத்தன்மையில் இருந்தது
மிகவும் பிடித்திருந்தது. பெரிய பந்தா இன்றி பிறரின் கருத்துகளையும் மதித்து கேட்க
கூடிய காதுகளையும் அவர் கொண்டிருந்தார்.
நன்றி:
டைம் இதழ் - எரிக் ரிப்பெர்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக