இயற்கையை சீரழிக்கும் நுகர்வு கலாசாரம்! - சூழல் பாதிப்புகள்







People, Man, Woman, Couple, Jacket, Fashion, Love




நாம் கவனத்துடன் இருக்கிறோமா?

ஒரு ஜோடி ஜீன்ஸ் பேண்டை தயாரிக்க 7,500 லிட்டர்கள் தண்ணீர் செலவாகிறது. இந்த நீரை வைத்து மனிதர்கள் ஏழு ஆண்டுகள் உயிர்வாழ முடியும்.

உலகில் ஒரு நொடிக்கு ஒரு லாரி நிறைய துணிகள் குப்பைகளாக கொட்டப்படுகின்றன. 85 சதவீத ஜவுளி நிறுவனங்கள் இந்த குப்பைகளை உருவாக்குகின்றன.

நாம் பயன்படுத்தும் பாலீஸ்டர் உடைகள் மூலமாக 35 சதவீத பிளாஸ்டிக்குகள் பூமியில் கழிவாகத் தேங்குகின்றன. இவற்றை மண்ணால் மட்கச்செய்ய முடியாது. அதிவேக நாகரிகத்தின் விளைவாக இந்த பிளாஸ்டிக்குகள் கடலிலும் கலந்து வருகின்றன.

ஜவுளித்துறை மூலமாக ஆண்டுதோறும் பத்து சதவீத கார்பன் வாயுக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த அளவு 2000 ஆவது ஆண்டைவிட 2014-2015இல் அதிகரித்துள்ளது.

மூன்று கிலோ உணவு தேவையின்றி கழிவாக வெளியே கொட்டப்பட்டால் 23 கிலோ கார்பன் வாயுக்களை சூழலில் உருவாக்குகிறது.

உலகில் மூன்றில் ஒரு பங்கு உணவு அல்லது 30 சதவீத உணவு கழிவாக குப்பையில் கொட்டப்படுகிறது.

வீணாக்கப்படும் உணவுகளால் 8 சதவீத பசுமை இல்ல வாயுக்கள் உருவாகின்றன.


நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்