சாகசம்தான் எனது வாழ்க்கையை உருவாக்கியது - பியர் கிரில்ஸ், பிரிட்டிஷ் சாகசக்காரர்
டூன்பூல் |
எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ்
என்றால் அடையாளம் கண்டுபிடிக்க முடிக்கிறதா? இவர்தான் ஆங்கில தொலைக்காட்சிகளில் ஆபத்தான
பல சாகசங்களிலும் பயணங்களிலும் ஈடுபடும் சாகச மனிதர். டிவி நிகழ்ச்சிகளில் எதிர்பாராததை
எதிர்பாருங்கள் என சாகச நிகழ்ச்சிகளை தனியாகவும், பிரபலங்களை வைத்தும் நடத்தி வருகிறார். 1994ஆம்ஆண்டு பிரிட்டிஷ் சிறப்பு படையில் வீரராகச்
சேர்ந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்கை டைவிங்கில் நேர்ந்த விபத்து, இவரது வேலைக்கு
ஆப்பு வைத்தது.
தனது சாகச நிகழ்ச்சிகள்,
வாழ்க்கை பற்றி ஏராளமான நூல்களை எழுதி லட்சக்கணக்கானோருக்கு நம்பிக்கை அளித்து வருகிறார்
பியர் கிரில்ஸ். ஃபேஸிங் அப், மட், ஸ்வெட், அண்ட் டியர்ஸ், கோஸ்ட் ஃபிளைட் ஆகிய நூல்களை
எழுதியுள்ளார். 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து
ராணி எலிசபெத்தால் ஓபிஇ எனும் பெருமைக்குரிய விருதைப் பெற்றுள்ளார்.
எந்த உணவு இல்லாமல் உங்களால் இருக்க முடியாது?
டீ. தினசரி பல கோப்பைகள்
டீயை நான் குடிக்கிறேன். பாதாம் வெண்ணெய், கேரட் கேக், வீட்டிலேயே தயாரிக்கும் குவாகேமோல்
ஆகியவை எனக்கு பிடித்தமானவை.
அடுத்து வரும் மாதங்களில் உங்களிடம் நாங்கள் என்ன எதிர்பார்க்கலாம்.
அடுத்துவரும் மாதங்களில்
நாங்கள் இந்தியாவைச்சேர்ந்த பிரபலங்களை வைத்து சாகச பயணங்களைத் திட்டமிட்டு வருகிறோம்.
இந்த நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்புகள் என்னை ஓய்விழக்கச்செய்கிறது. மேலும் ஸ்கவுட்
தொடர்பான பேரணி ஒன்றில் பங்கேற்கவிருக்கிறேன். ஸ்கவுட்டிங் மூலம் இளைஞர்கள் நிறைய விஷயங்களைக்
கற்றுக்கொள்ள முடியும்.
தற்போதும் வாழும் அல்லது இறந்துபோன மூன்று பிரபலங்களை அழைக்கவேண்டும்
என்றால் யார் யாரை அழைப்பீர்கள்?
எனது சிறந்த நண்பரும் கலைஞருமான
சார்லி மகாஸி, டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், இமயமலையில் 1924ஆம்ஆண்டு ஏறிய ஜார்ஜ் மல்லோரி.
உங்களுக்கு மிகவும் பிடித்த சாகசம் என்றால் எது?
எனது குடும்பத்தினருடன்
செலவிடம் நேரம்தான் சாகச அனுபவம் என்று கூறுவேன். நாங்கள் குடும்பமாக சவுத்வேல்ஸிலுள்ள
தீவுக்கு செல்வோம். அங்கு மின்சாரம், குடிக்க நல்ல நீர் கூட கிடைக்காது. அங்கு நாங்கள்
எங்களது மூன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக இருப்போம். நானும் என் மனைவி சாராவும் மகிழ்ச்சியாக
அனைத்து விஷயங்களையும் மறந்துவிட்டு இருக்கும் இடம் அதுதான். அங்கு நாங்கள் மலையேற்றம்,
டைவ் அடிப்பது, பாராகிளைடிங் ஆகிய விஷயங்களை
செய்துகொண்டு இருப்போம்.
உங்களது சிறுவயது அனுபவங்களைச் சொல்லுங்கள்.
எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிருந்து
சாகச அனுபவங்கள்தான் என்னை இயக்கி வந்திருக்கிறது. மறைந்த எனது தந்தையுடன் சிறுவயதில்
செய்த மலையேற்ற பயிற்சிகள், ஸ்கவுட் பயிற்சிகள் பின்னாளில் பிரிட்டிஷ் சிறப்புபடையில்
சேர்வதற்கான தகுதியை உருவாக்கின. இந்த சாகச பயணங்கள்தான் என் வாழ்க்கையை, நட்பை உருவாக்கின.
நான் இளைஞர்களுக்கான நம்பிக்கையை கொடுத்துக்கொண்டிருக்க முயல்கிறேன். இதுதான் எனது
நோக்கம்.
இமயமலை ஏறியது முதல் கடல்களை
படகில் கடப்பது வரையிலான சாதனைகளை செய்துள்ளீர்கள். எது உங்களுக்கு பிடித்த சவாலான
பயணம் என்று நினைக்கிறீர்கள்?
வடக்கு அட்லாண்டிக் ஆர்க்டிக்
பகுதியில் சிறிய ரப்பர் படகில் பயணித்த பயணத்தை மறக்க முடியாது பத்துக்கும் மேற்பட்ட புயல்களில் தப்பித்து முழுக்க
நனைந்து திகிலுடன் பயணித்த பயணமாக அமைந்தது.
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஆங்கிலத்தில்: ராஷ்மி ராஜகோபால்
கருத்துகள்
கருத்துரையிடுக