நோய்த்தொற்றை எதிர்க்க நிறுவனங்கள் ஒன்றாக சேர்ந்து உழைத்து வருகிறோம்! - சதீஸ் ரெட்டி, டாக்டர் ரெட்டி லேப்ஸ்
டாக்டர் சதீஸ் ரெட்டி
டாக்டர் ரெட்டிஸ் லேபாரெட்டரி நிறுவன தலைவர்.
பெருந்தொற்று காலத்தில் மருந்து நிறுவனங்கள் என்ன சவால்களை
சந்தித்துள்ளதாக நினைக்கிறீர்கள்?
மருந்துகளின் தயாரிப்பு,
சோதனை, ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் தேக்கதைச் சமாளித்தோம். பெருந்தொற்றை
சமாளிக்கும் விதத்தில் மருந்துத்துறை தயாராக இல்லை என்பதால் நிறைய கஷ்டங்கள் இருந்தன.
வணிகத்தில் என்னென்ன இடர்ப்பாடுகளைச் சந்தித்தீர்கள்?
மருந்துகளுக்கு தேவையான
மூலப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. மற்றபடி அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய
இடங்களில் மருந்து வணிகம் சிறப்பாகவே இருந்தது. இந்தியாவில் பொது முடக்க சூழலால் வியாபாரம்
பாதிக்கப்பட்டது.
என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டீர்கள்?
நாட்டில் நடக்கும் இயற்கை பேரிடர்கள் எப்போதுமே நாம் கற்றுக்கொள்வதற்கான நிறைய விஷயங்களை நமக்கு கற்றுக்கொடுக்கும் என்பது உண்மை. மருந்து துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து அரசுக்கு உதவி வருகிறோம். பொதுவாக சந்தையில் ஒருவருக்கொருவர் போட்டியிடும் நிறுவனங்கள் என்றாலும் இம்முறையில் நாங்கள் ஒன்றாக இணைந்து பெருந்தொற்றை எதிர்த்து வருகிறோம். இத்தொழில்முறையை இப்போது முழுக்க டிஜிட்டல் மயமாகவும், இயந்திரமயப்படுத்தியும் வருகிறோம். இதுதான் எதிர்காலத்தில் மருந்துதுறையை மேம்பாடு அடையச்செய்யும் என நம்புகிறோம்
மருந்துகளை ஜெனரிக் முறையில் தயாரித்து அளிக்க அரசு முயன்றால்
அதற்கு உதவுவீர்களா?
உலகிலேயே இந்தியாவில்தான்
அதிகளவு ஜெனரிக் மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. எனவே அரசு எங்களிடம்
கேட்டுக்கொண்டால் நாங்கள் உதவுவதற்கு தயாராகவே இருக்கிறோம். விரைவில் இத்துறையில்
10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கவுள்ளது. இவை கிடைக்கும்போது சுயசார்பு இந்தியா
திட்டமும் பயனளிக்கும்.
நன்றி: பிஸினஸ் டுடே
ஆங்கிலத்தில்: ஜோ சி மேத்யூ
கருத்துகள்
கருத்துரையிடுக