இன்று திபெத்திற்கு ஏற்பட்ட நிலைமை நாளை இந்தியாவுக்கும் ஏற்படலாம்! - சீனாவில் எல்லை அத்துமீறல்களின் நோக்கம்
லோப்சங் சங்கே
திபெத்தின் அதிபர். தற்போது அயல்நாட்டில்
வசிக்கிறார்.
இந்திய எல்லைப்பகுதியில் சீனா திடீரென
ஆக்ரோஷம் காட்டுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
சீனா வரலாற்று ரீதியாக திபெத்தை தன்
மணிக்கட்டாகவும், சிக்கிம், பூடான், நேபாளம், அருணாசலபிரதேசம், லடாக் ஆகிய பகுதிகளை
தன்னுடைய விரல்களாகவும் பார்க்கிறது. திபெத்தை இப்போது ஆக்கிரமித்துவிட்டபடியால் அவர்கள்
அடுத்து லடாக்கை குறிவைத்து நகர்ந்து வருகின்றனர். திபத்தியர்கள்தான் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு
முதலில் பலியானவர்கள் என்பதால் உலக நாடுகள் கவனமாக இருப்பது அவசியம்.
மக்கள் விடுதலை ராணுவம் இப்போது திபத்தை
ஆக்கிரமித்துக்கொண்டு அதனை மையமாக வைத்து பிற பகுதிகளை பிடிக்க நினைக்கிறதா?
முன்னர் இருந்தே சீனாவுக்கும், இந்தியாவுக்கும்
எல்லைப்பிரச்னைகள் கிடையாது. திபெத், இந்தியா நாடுகளுக்கு இடையிலும் பிரச்னை கிடையாது.
இப்பகுதியை சீனா ஆக்கிரமித்தபிறகு, இதுபோன்ற ராணுவ அச்சுறுத்தல்கள் இருபுறமும் ஏற்பட்டுள்ளன.
திபெத் இருநாடுகளுக்குமான இடைமுகமாக அதிக நாட்கள் இருக்கப்போவதில்லை.
சீனா அச்சுறுத்தல் அணுகுமுறையில் திபெத்தின்
நிலைப்பாடு என்ன?
திபெத், இந்தியாவுடன் அஹிம்சையின் துணையோடு
நிற்கிறது. சீனா, மனித உரிமைகளுக்கு எதிராக, ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறது.
எனவே, திபெத் பிற நாடுகளையும் விழிப்புணர்வாக இருக்க எச்சரிக்கிறது. இன்று திபெத்திற்கு
நடந்த ஆக்கிரமிப்பு சம்பவம், நாளை இந்தியாவுக்கு நடக்க வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியா அக்சாய்
சின் பகுதி தொடர்பாக வரைபடத்தை வெளியிட்டது அதுபற்றி உங்கள் கருத்து?
இப்பிரச்சை ஜின்ஜியாங், திபெத் ஆகிய
பகுதிகளை சீனா ஆக்கிரமித்தபோதிலிருந்தே இருக்கிறது. அக்சாய் சின் பற்றிய பேச்சுவார்த்தை
நடத்தி முடிவெடுக்கலாம். அப்படி பேச்சுவார்த்தை நடைபெறாதபோது, பிரச்னை அப்படியே தொடரும்
வாய்ப்பு உள்ளது.
இந்தியா இனிமேல் தலாய்லாமாவை மேலும்
கவனமாக பாதுகாப்பதோடு முக்கியத்துவம் அளிக்கும் என நினைக்கிறீர்களா?
திபெத்தியர்களுக்கு இந்தியா இரண்டாவது
வீடு என்று சொல்லும்படி அந்நாடு உதவிகளை எங்களுக்கு வழங்கியிருக்கிறது. அவர்கள் பல்லாண்டுகளாக
எங்கள் தலாய்லாமாவைப் பாதுகாத்து வருகிறார்கள்.
பெருந்தொற்று காலத்தில் சீனப் பொருட்களை
புறக்கணியுங்கள் என்று பிரசாரம் செய்யப்பட்டு வருகிறதே?
சீனப்பொருட்களை புறக்கணிப்போம் என்ற
பிரசாரம் பல்லாண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. மக்களைப் பொறுத்தவரை தேசப்பற்று என்பதை
விட குறைவான விலைக்கு சந்தையில் கிடைக்கும் பொருட்களைத்தான் வாங்குவார்கள். இந்தியாவில்
உள்ள மக்கள் தனிப்பட்ட ஆர்வம், பொழுதுபோக்கு தாண்டி இதுபற்றி சிந்திக்கவேண்டும். இந்தியா
சீனாவை விட குறைவான விலையில் பொருட்களை தயாரிக்க முடிந்தால், மக்கள் இந்தியப் பொருட்களையே
வாங்குவார்கள். இந்த நடவடிக்கை சீனாவின் ஆக்ரோஷத்தை எல்லைப்பகுதியில் மேலும் அதிகரிக்கும்.
தி வீக்
நம்ரதா பிஜி அகுஜா
கருத்துகள்
கருத்துரையிடுக