தற்சார்பு இந்தியா என்பது சாத்தியமில்லாத போலி வாக்குறுதி - சதானந்த் துமே








पीएम मोदी का राष्ट्र के नाम संबोधन ...
the print




தற்சார்பு இந்தியா என்பது போலியான வாக்குறுதியா?
சதானந்த் துமே
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

  

இந்தியா இனி தற்சார்பு இந்தியாவாக இருக்கப்போகிறது என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியா உலகமயமாக்கலின் படி செயல்பட்டு வந்துள்ளது. கடந்த மே 12ஆம்தேதி இந்தியா கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தற்சார்புத்தன்மையை தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை நினைவுறுத்திக்கொண்டுள்ளது.  இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் பாதை தற்சார்பு பாதையாகவே இருக்கும் என்று மோடி பேசினார். நாம் இப்போது தாராளமய உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்நிலையில் திரும்ப தற்சார்பு என்ற நிலைக்கு திரும்புவது அனைத்து துறைகளையும் பின்னோக்கியே செலுத்தும் என்று தோன்றுகிறது.

அரசு ஆத்மா நிர்மார் பாரத் போல நிறைய திட்டங்களை அறிவித்துள்ளது. இவற்றில் பலவும் நடைமுறைக்கு வந்துள்ளதாக என்று தெரியவில்லை. தற்சார்பு என இந்திய நிறுவனங்களைச் சார்ந்து இந்தியா இயங்க நினைத்தால் டிஜிட்டல் இந்தியா அனலாக் இந்தியாவாக மாறிவிட வாய்ப்புள்ளது. பிரதமர் மோடி முன்னர் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை தொடங்கி வைத்தார். இதன் அர்த்தம், நாம் பாழ்பட்ட குப்பை நகரங்களில் வாழ்கிறோம் என்பதல்ல. நகரங்களை இன்னும் மேம்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டமிது. இதைப்போல தற்சார்பு திட்டங்களை கருத முடியுமா என்று தெரியவில்லை.

ஜவாகர்லால் நேரு, இந்திராகாந்தி ஆகியோர் ஆட்சியில் இருக்கும்போது இந்தியப் பொருட்கள் சார்ந்த பெருமை காந்தி மூலம் அவர்கள் மனத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்சார்பு இந்தியா திட்டம் தேசப்பற்றாளர்களுக்கு பெருமையில் மார்பை விம்மி புடைக்க வைத்திருக்கும். தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைத்து தயாரிப்பது என்பது கடினமான காரியம் அல்ல. சுலோகங்களை சொல்லுவதை விட தொழிற்சாலைகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது முக்கியம்.

வைரஸை பரப்பிய சீனா, உலகிலேயே குறைவான விலையில் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது என்பது உண்மை.  இந்தியாவில் சீனாவின் ஆதரவு இன்றியே நம்மால் தினசரி 2 லட்சம் முக கவசங்கள், பாதுகாப்பு உடைகளை தயாரிக்க முடியும் என்பதை யாரும் மறுக்கவில்லை. அமெரிக்காவில் டிரம்ப், இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன், பிரேசிலின் பொல்சனாரோ, ஹங்கேரியின் விக்டர் ஆர்பன், துருக்கியின் எர்டோகன் போல நம் நாட்டுக்கு கிடைத்த புதுமையான தலைவர்கள் நரேந்திர மோடியும், அமித்ஷாவும். ஏராளமான விஷயங்களை மாற்றி அமைத்து வருகிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு தாராள வணிகத்திற்காக பொருட்களின் விலையை ஏகத்துக்கும் உயர்த்தியுள்ளது மேலும் உலகளவில் இந்திய நிறுவனங்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ஆர்சிஈபி ஒப்பந்தம் மூலம் கிடைத்தபோதும், அதனை நிர்தாட்சண்யமாக நிராகரித்தனர். இதனால் வீழ்ந்தது யார் தெரியுமா? உலகளவிலான நிறுவனங்களோடு போட்டியிடம் திறன் கொண்ட இந்திய நிறுவனங்கள்தான். அதன் பின் நுகர்வோர்களான மக்களும்.

இந்திய அரசு, திடீரென தற்சார்பு இந்தியா என்று பேசுவது வெளிநாட்டு முதலீட்ட்டாளர்க்கு பயத்தை ஏற்படுத்தும். தாராளமயமாக்கலுக்கு முன்னர் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இங்கு இடமேயில்லை. கொககோலா, ஐபிஎம் ஆகிய நிறுவனங்கள் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டன. தொண்ணூறுகளுக்கு பிறகு பெப்சி நிறுவனம் லெஹர் என்ற பெயரோடு இந்திய சந்தையில் நுழைந்தது. லெஹர் என்பதற்கு அலை என்று பொருள். வி.பி.சிங் பெப்சி நிறுவனம் இந்தியாவில் தொழில் செய்வதற்கான அனுமதியை வழங்கினார்.

தனியார் நிறுவனங்கள் குறைவாக இருந்த காலகட்டம்தான் தற்சார்பு இந்தியா காலகட்டம். அப்போது அனைத்து துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்கள் நிறைந்திருந்தன. ஒரு ஸ்கூட்டர் வாங்க கூட ஆண்டுக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டும். வரிசையில் வராமால் பொருட்களை வாங்க நீங்கள் செல்வாக்கு பெற்றிருந்தால் மட்டுமே சாத்தியம். இதன்விளைவாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும், மக்களின் வாழ்நிலையும் மேம்பட அதிக காலம் தேவைப்பட்டது. வரலாற்றை திரும்ப பார்ப்பது நமக்கு இருவகைகளில் உதவும். ஒன்று நாம் செய்த தவறுகளை நினைவில் கொள்வதற்கு. இரண்டாவது, திரும்ப அத்தவறுகளை செய்யாமல் இருப்பதற்கு. அரசு தற்சார்பு இந்தியா விவகாரத்தில் வரலாற்று தவற்றை மீண்டும் செய்யாமல் நிருக்கவேண்டும்.


கருத்துகள்