சமூக இடைவெளி என்பது மனித தன்மையற்ற செயல்! - எழுத்தாளர் சோபா டே
லாக்டௌன் லையசன்ஸ் என்ற நூலை எழுதியிருக்கிறீர்கள்.
இதுதான் நீங்கள் வேகமாக எழுதிய நூலா?
இந்த
நூல் இன்னும் முடியவில்லை. இதில் இன்னும் பல பாகங்கள் வரவிருக்கின்றன. என் தலையில்
தோன்றும் விஷயங்களை இந்நூல்களில் எழுதி வருகிறேன். பொதுமுடக்க காலத்தை எழுத்தில் பதிவு
செய்வது அவசியம் என்று நினைக்கிறேன். எனவேதான் இந்த நூல்களை எழுத தோன்றியது.
பொதுமுடக்க காலத்தில் நடந்த நன்மை என்று
எதனைச் சொல்லுவீர்கள்?
வைரஸ்
என்பது மனிதர்களின் நம்பிக்கையை கொல்ல முடியாது. என்னை நானே அடையாளம் காண இந்த காலகட்டம்
எனக்கு உதவியது. பொதுமுடக்க காலம், இதற்கு முந்தைய காலத்தையும், பிந்தையை காலத்தையும்
எப்படி பார்ப்பது என்ற சிந்தனையை அளித்துள்ளது.
இந்த நூலை எழுத தூண்டிய விஷயம் என்ன?
இன்று
நாம் கடைபிடிக்கும் சமூக இடைவெளி என்பதே மனித தன்மையற்ற செயல். மனிதர்க் சமூக விலங்குகள்.
ஒருவரையொருவர் கட்டித்தழுவதும், முத்தமிடுவது, கைகளைக் கொடுத்துக்கொள்வது என வாழ்பவர்கள்.
இன்று நாம் வீடு எனும் நவீன வசதிகள் கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இதிலிருந்து
நாம் மீள வேண்டும். இக்காலகட்டத்தில்தான் எனக்குள் பல்வேறு குரல்கள் இதைப்பற்றி எழத்தொடங்கின.
அவற்றை நான் எழுத்தில் பகிரவேண்டும் என்ற நினைக்கிறேன். அதனால்தான் இந்த நூலை எழுதினேன்.
இந்தக் கதைகளின் பொதுவான தன்மை என்ன?
இந்தக்கதைகளின்
பொதுவான தன்மை காதல்தான். ஆனால் பொதுவாக நாம் சந்திக்கும் காதல் போன்று இவை இருக்காது.
கொஞ்சம் கடினமாகவும் நேரடியாகவும் தாக்கும்படியும் காதல் இருக்கும். மனச்சோர்வைத் தரும்
இக்காலகட்டத்தில் வரும் காதல் இப்படித்தான் இருக்கும் என கதைகளை எழுதியுள்ளேன். திருமண
உறவுகள் சிதைந்து வருகின்றன. பாலுறவு என்பது இறந்தே விட்டது எனும் சூழலில் ஒருவரின்
காதல் எப்படியிருக்கும் என்பதுதான் சிறுகதைகளின் அடிநாதம்.
தி
வீக்
ஆங்கிலத்தில்:
சூசம்மா ஜாய் குரியன்
கருத்துகள்
கருத்துரையிடுக