பெருந்தொற்று சாதி உணர்வை மழுங்கடித்து உள்ளது!




Handcuffed, Arrest, Oppression, Racism, Classism






நமது சமூக அமைப்பில் சாதி முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.

சமூக வரலாற்று ஆய்வாளர் பத்ரி நாராயணன்

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

ஆங்கிலத்தில்: அவ்ஜித் கோஷ்

சமூக உருவாக்கத்தில் சாதியின் இடம் என்ன?

சாதி, நம் சமூக உருவாக்கத்தில் முக்கியமான பங்கை வகித்துள்ளது. தற்போது பெருந்தொற்று காலம் சாதி தொடர்பான தன்மையில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பொதுவாக உயிர்வாழ்தலுக்கு ஆபத்து ஏற்படும் காலங்களில் நம் மனதில் சாதி சார்ந்த கவனம் குறைந்து ஆவேசம், புனிதமான தன்மை காணாமல் போகும். இப்படி வரலாற்றில் நிறைய முறை நடந்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் நாம் சாதி சார்ந்த கண்ணோட்டத்தில் பார்க்கப் பழகிவிட்டோம். இதெல்லாம் தாண்டியும் நாம் சாதிகளிடையே ஒற்றுமையாக வாழ்ந்துவருகிறோம் என்பது முக்கியமானது. இதனை பரிணாம வளர்ச்சி வழியாக அடைந்திருக்கிறோம். இதனை மேலும் விரிவாக்கி நாம் பார்க்கவேண்டும்.

பெருந்தொற்று காலத்தில் சாதி சார்ந்த பழக்கங்களை நம்மால் கடைபிடிக்க முடியுமா? ஒரே வண்டியில் பல சாதிகளைச் சேர்ந்தவர்கள் நெருக்கமாக உட்கார்ந்துகொண்டு பயணிக்கிறார்களே?

நாம் டிவிகளிலும் நாளிதழ்களிலும் இதைப்பற்றி படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். வேறு மாநிலங்களில் செய்து வந்த வேலைகளை இழந்து அவர்கள் கால்நடையாக அல்லது தனியார் வாகனங்களைப் பிடித்து சொந்த மாநிலங்களிலுள்ள ஊருக்கு திரும்பி வருகின்றனர். வாழ்க்கையை இழந்து உணவுக்கு அலைந்து போய் திரிந்து ஊருக்கு உயிரோடு திரும்பினால் போதும் என்ற நிலையில் உள்ளனர். பெருந்தொற்றுக்குப் பிறகு இவர்கள் பிறரோடு பழகும் நிலையும் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இனி இந்த கொடுமையான அனுபவம் வாய்க்கப் பெற்றவர்கள் மனத்தில் ஜாதி என்பது நீர்த்துப்போன வடிவில்தான் இருக்கும்.

எடுத்துக்காட்டுகளை சொல்லுங்களேன்.

பெருந்தொற்று காலத்தில் உணவு, குடிநீர் ஆகிய தேவைகளுக்கு பலரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் ஜாதி என்பது அவ்வளவு உறுதியாக அவர்களது மனத்தில் இருக்காது. பல்வேறு உதவிகளை ஒருவருக்கொருவர் செய்துகொண்டு அனுசரணையாக இருக்கின்றனர். இந்நிலையில் கிராமங்களிலும் ஜாதி சார்ந்த மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பீகாரில் உள்ள சமஸ்திபூரில் தலித் ஒருவர் உயர்ஜாதிக்காரரை தனிமைப்படுத்துதல் இல்லாமல் உள்ளே விட மறுத்துள்ளார். இதற்கு மொத்த ஊருமே ஆதரவு தெரிவித்து அவரை ஊருக்குள் விட மறுத்துள்ளது. வைரஸ் மீது ஏற்பட்டுள்ள பீதியும், தம்மைக் காத்துக்கொள்ளும் பாதுகாப்பு உணர்வும் ஜாதி உணர்வை மழுங்கடித்துள்ளது.

பிற நாட்களில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இடையில் ஜாதி வேறுபாடு கிடையாதா?

பொதுவாக நகரங்களில் பணியாற்றும் தொழிலாளர்களிடையே ஜாதி பார்க்கும் பாகுபாடு குறைவு. இருந்தாலும் ஜாதி சார்ந்து வேலை கிடைக்கும் இடங்களில் அவர்கள் ஜாதியை மறைத்து வேலைவாய்ப்புகளை பெறுகின்றனர். நகரங்களில் பிழைக்கவேண்டும் அல்லவா? இந்த உண்மையை நாங்கள் ஆய்வு மூலம் கண்டுபிடித்தோம். ஜாதியை தாங்கள் வாழும் உள்ளூர்ப்பகுதிகளில் அரசியல் ஆதாயங்களுக்கு கூட இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் தாங்கள் உயர்ந்த ஜாதிக்கார ர்கள் என்று சொல்லித்தான் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை பெறுகிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் நகரங்களில் வேலைவாய்ப்புகளை பெற்றே ஆகவேண்டும் என்ற நெருக்கடிதான்.


கருத்துகள்