வைரசை விட அகதிகளை பயமுறுத்தும் பசி!







கருப்பு இந்தியா!

மியான்மரிலிருந்து இந்தியாவுக்கு வந்த ரோஹிங்கயா முஸ்லீம்கள் உங்களுக்கு நினைவுக்கு வருகிறார்களா? அவர்களையும்உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலுள்ள மக்களையும் காலிஞ்சி கன்ச் அருகிலுள்ள சரண் விகார் முகாம்களில் தங்க வைத்துள்ளது. அரசு அவர்ளுக்கு ரேஷனில் பொருட்கள் வழங்கினாலும் அவர்களது வாழ்க்கை பசியும் பயமுமாகவே கடக்கிறது. 

டில்லியிலுள்ள காலிஞ்சி கன்ஞ் முகாமைக் காணச்சென்றால் நம்மை வரவேற்பது ஆளுயுரத்திற்கு குவிந்துள்ள மருத்துவக்கழிவுகள்தான்.இங்கு நோயாளிகளுகு பயன்படுத்திய சிரிஞ்சுகள், குளுக்கோஸ் பாட்டில்கள், மருந்து புட்டிகள், ரத்தத்தை துடைத்துப்போட்ட பஞ்சுகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள் என ஏராளமாக குவிந்துள்ளன. இங்கு மக்களில் பெரும்பாலானோர் மருத்துவ கழிவுகளை ஒப்பந்ததாரரிடம் பெற்று அதனை விற்று வயிற்றுப்பாட்டை கவனிக்கின்றனர். ஒரு கிலோ மருத்துவக்கழிவை பன்னிரெண்டு ரூபாய்க்கு விற்று வருகின்றனர். 

இங்குள்ள சிறுவர்கள் விளையாட்டைக் கூட அங்குள்ள மருத்துவக்கழிவுகளை வைத்தே திட்டமிடுகின்றனர். அங்கு சென்று பார்த்தபோது சிறுவர்களுக்கு இடையில் அதிக சிரிஞ்சுகளை யார் பொறுக்குவது என்று போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. பெரும்பாலான கழிவுகள் அசாம் மக்கள் முகாம்களிடையே கிடக்கிறது. அங்குள்ள குப்பைகளை பொறுக்குபவரான அன்வர் இஸ்லாமிடம் பேசினோம். “இப்போது வைரஸ் பிரச்னை எங்கள் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. முன்னர் ஷாகின் பாக் போராட்டம் காரணமாக தவித்தோம். எங்களுக்கு இந்த குப்பைகளால் வரும் நோய் பயத்தை விட பசிதான் பெரிதாக தெரிகிறது. எங்களது குழந்தைகள் பசியில் அழுவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது’ என்கிறார். 

வயிற்றுக்கு ஊரடங்கு பற்றி என்ன தெரியும்? அதனால்தானா இங்கு குவிந்துள்ள குப்பைகளை பொறுக்கி நாங்லோயிலுள்ள இடத்திற்கு சென்று விற்று வருகிறார்கள் இம்மக்கள். இது ஆபத்தானது என்று தெரிந்தாலும்  அவர்களின் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கு வருமானம் வேண்டும் என்பதால் இதனை துணிந்து செய்து வருகின்றனர். 

நன்றி - இந்தியன் எக்ஸ்பிரஸ்  





  


கருத்துகள்