வங்கத்தின் பங்கபந்து சாட்டிலைட்!



Image result for bangabandhu-1



வங்கதேசத்தின் முதல் சாட்டிலைட்!

வங்கதேசத்தின் தகவல்தொடர்பு செயற்கைக்கோளான பங்கபந்து 1, அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள கேப் கார்னிவலிலிருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது. வங்கதேச தந்தையான ஷேக் முஜிபிர் ரஹ்மானின் நினைவாக பங்கபந்து இச்செயற்கோளுக்கு பெயர் சூட்டியுள்ளனர். பதினைந்து ஆண்டுகளாக திட்டமிட்டு ஏவப்பட்ட செயற்கைக்கோள் திட்டம் இது.


 Bangladesh Communication Satellite Company Ltd எனும் வங்கதேச அரசால் உருவாக்கப்பட்ட நிறுவனம் இத்திட்டத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. இணையம் மற்றும் தகவல்தொடர்புக்கான விஷயங்களைச் செய்ய இச்செயற்கைக்கோள் உதவும்.
வங்கதேசம் தற்போது தகவல்தொடர்புக்கு வெளிநாட்டு செயற்கைக்கோள்களை பயன்படுத்தி வருகிறது. இதற்கு வாடகையாக ஆண்டுதோறும் 14 மில்லியன் டாலர்களை அளிக்கிறது. தற்போது ஏவியுள்ள பங்கபந்து 1 கைகொடுத்தால் விரைவிலேயே வாடகைக் செலவு குறைந்துவிட வாய்ப்புள்ளது.