காலக்கோடு வடிவில் திரௌபதி முர்மு வாழ்க்கை! - ஆசிரியர் பணி முதல் குடியரசுத்தலைவர் பணி வரை....
பழங்குடி இன தலைவர் முதல் குடியரசுத்தலைவர் பயணம்!
1958
திரௌபதி முர்மு, ஒடிஷாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உபர்பேடா எனும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை, நாராயண் பிராஞ்சி டுடூ, விவசாயி.
1979
ஒடிஷாவின் புவனேஷ்வரில் ராம்தேவி பெண்கள் பல்கலைக்கழகத்தின் பி.ஏ. நிறைவு செய்தார். படிப்பை முடித்தவுடனே கௌரவ உதவி பேராசிரியராக ஸ்ரீஅரபிந்தோ கல்வி ஆராய்ச்சிக்கழகத்தில் பணியாற்றினார்.
1980
ஒடிஷாவின் பகத்பூரைச் சேர்ந்த வங்கிப்பணியாளரான ஷியாம் சரண் முர்முவை மணந்தார்.
1983
நீர்பாசனம் மற்றும் மின்வாரியத்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றினார்.
1997
ராய்ரங்பூர் நகர கவுன்சிலராக தேர்வு பெற்றார்.
2000
ஒடிஷா மாநில அரசில் வணிக போக்குவரத்துத் துறை அமைச்சராக (2000 மார்ச் 6 - 2000 ஆகஸ்ட் 6) நியமிக்கப்பட்டார்
2002 -2004
மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சரானார் (2002 ஆகஸ்ட் 6 - 2004 மே 16)
2007
சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான நீல்கந்தா விருது (Nilkantha award) பெற்றார்.
2009
முதல் மகன் லஷ்மண் உடல்நலக்குறைவால் காலமானார்.
2013
இரண்டாவது மகன் சிபுன், விபத்து காரணமாக காலமானார்.
2014
ஏற்கெனவே உடல் நலிவுற்றிருந்த கணவர் ஷியாம் சரண் முர்மு,மாரடைப்பு காரணமாக மறைந்தார்.
2015
மே 18ஆம் தேதி, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தார்.2020ஆம் ஆண்டு மே 18ஆம் தேதியோடு திரௌபதி முர்முவின் பதவி முடிவுக்கு வந்தது. ஆனால், 2021ஆம் ஆண்டுவரை ஆளுநராக பதவியை மத்திய அரசு நீட்டித்தது. இதற்கு, பெருந்தொற்றும் முக்கியக் காரணம்.
2022
ஜூலை 21ஆம் தேதி, குடியரசுத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றார்.
-----------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக