வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்தப்பட்டால் என்னவாகும்?
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்தப்பட்டால் என்னவாகும்? – திரைப்பட இயக்குநர் ஆனிர்
தேசிய விருது பெற்ற இந்தி திரைப்பட இயக்குநரான ஆனிர் விருதினை திருப்பித்தருவதில் தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறுவதோடு மற்றவர்களை புரிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கிறது என்றும் கூறுகிறார். ஷாருக்கான் இந்தியாவில் பெருகிவரும் சகிப்புத்தன்மையற்ற சம்பவங்கள் குறித்த சம்பவம் குறித்தும், தாராளமான கருத்துக்களை தெரிவிக்கும் தளம் சுருங்கி வருவது குறித்தும் நம்மிடையே விரிவாக பேசுகிறார்.
ஆங்கிலத்தில் மெஹூல் தாக்கா
தமிழில்: வின்சென்ட் காபோ
\
நாட்டில் நிகழ்ந்த சம்பவங்கள்
குறித்த தங்கள் புரிந்துகொள்ளல் என்பது என்ன?
இன்று நம் சமூகத்தில் எந்த உரையாடலையும் தொடங்குவதற்கு
இடமே இல்லாமல் போய்க்கொண்டு இருப்பது என்னை துயரத்தில் ஆழ்த்துகிறது. வேறுபாடுகளை சரியென
ஏற்றுக்கொள்வது என்பதில்லாமல் அவர்களிடத்தில் மௌனத்தை உருவாக்குவது சரியானதல்ல.ந இதற்கு
முன்பு வேறு அரசின் ஆட்சியில் இருக்கும்போதும், சமூகம் தொடர்பான பல்வேறு விஷயங்களில்
எனது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்துள்ளேன். ஆனால் இன்று உருவாகியுள்ள பிற்போக்குத்தனமான
குழைவான ஒரு சூழலை நான் இதுவரை கண்டதில்லை. சமூகத்திலும் பிளவுகள் நாள்தோறும் வளர்ந்தபடி
இருக்கின்றன. இதில் ஜாதியின் பங்கினை மட்டும் நான் தனியாக அர்த்தப்படுத்தவில்லை. அதுவும்
இதில் ஒரு பகுதியாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் ஒரு நிகழ்வு குறித்த எனது கருத்துக்களை
பகிர்ந்துகொண்டால் சிலர் நீங்கள் நாட்டுக்கும் பிரதமருக்கும் எதிராகப் பேசுகிறீர்கள்
என்று கண்டனக்குரல் எழுப்புகிறார்கள். அட, விவாதம்தானே ஜனநாயகமும் கூட.
எதிர்நிலை என்பது எப்போதும் இருக்க கூடிய ஒன்றுதான்.
மக்கள் உங்களை இடதுசாரிகள் (அ) போலி அறிவுஜீவி என்றும், குறிப்பிட்ட கட்சி சார்பான
நிலைப்பாடுகளை ஆதரிப்பதாக குற்றம் சாட்டுவார்கள். ஒவ்வொருவரும் தனக்கு உரித்தான குரலை
சுதந்திரமாக வெளிப்படுத்த எந்த கட்சியும் அனுமதித்துவிட மாட்டார்கள். அரசினை எதிர்த்து
பேசுவதாக வரும் எதிர்மறைப்போக்கு கொண்ட கருத்துக்கள் என்னை ஆச்சர்யப்படுத்துகின்றன.
இப்படி கண்டனக்குரல் தொடுப்பவர்கள் வரலாற்றைக்
கவனிப்பதே இல்லை. உங்களுக்கு நிகழ்கின்றவை விரும்பத்தக்கதோ தகாததோ அவற்றுக்கு மதிப்பளித்துத்தான்
ஆகவேண்டும். நாமனைவரும் வளர்ச்சி குறித்து ஏக்கம் கொண்டிருக்கிறோம். ஆனால் மனிதர்களான
நாம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி விஷயங்களை புரிந்துகொள்ளாமல் வளர்ச்சி எப்படி சாத்தியமாகும்?
மாறுபட்ட கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் அக்கருத்தினை கூறும் மக்களை தன்னிலிருந்து வேறுபட்ட கருத்தினைக் கொண்டிருக்கிறார்
என்பதற்காக ஏன் தாக்கவேண்டும்? அறிவியலாளர்களில் ஒருவரான எனது சகோதரர் விருதுகளை திருப்பியளித்தவர்களில்
ஒருவராவார். இது குறிப்பிட்ட ஒருவரின் பார்வைக்கோணம். இது கட்டாயம் மதிக்கப்படவேண்டும்.
உரையாடலின் வழியேவா இவ்வளவு பாதுகாப்பின்மை உருவாகிறது?
மற்றவர்களை வெறுப்பதுதான் சிறந்த தேசபக்தியின் அடையாளமா? ஒரு ஜனநாயக நாட்டில் மாட்டிறைச்சியை
எப்படி தடைசெய்ய முடியும்? காஷ்மீர், வடகிழக்கு மாவட்டங்களில் என்ன முடிவெடுப்பீர்கள்?
அங்கு பன்றிக்கறியை தடை செய்வீர்களா? இந்த முறையில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி என தடை
செய்வீர்களா? இது எங்கு போய்த்தான் நிற்கும்?
ஷாருக்கான் ’மதரீதியாக சகிப்புத்தன்மையற்ற
நிலை ஏற்படுவது நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை போக்கிவிடும். தேசபக்தராக நீங்கள் செய்யும்
மோசமான குற்றம் இது’ என்று கூறியிருந்தார். இது குறித்து தங்கள் கருத்து என்ன? வளர்ந்து
வரும் சகிப்புத்தன்மையற்ற போக்கு எப்படி நமது சமூக அமைப்பின் இழைகளை மெல்ல அழிக்கிறது?
இது குறித்து வெளியான கருத்துக்களை ஆளும்கட்சி
தன்னுடைய கட்சி நிலைப்பாடல்ல என்று தெரிவித்துவிட்டது. உங்கள் கட்சி சார்ந்த ஒருவர்
கூறும் கருத்துக்கு யார் பொறுப்பு? அரசு இதில் சரியான ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டும்.
நாம் நாட்டினை இம்முறையில் தனித்தனியாக துண்டித்துவிடுகிறோம்.
ஷாருக்கான் கூறிய கருத்துக்கு
எழும் உடனடியான எதிர்வினைகள் எதை உணர்த்துவதாக கருதுகிறீர்கள்?
நமது நாட்டின் ஜனநாயகத்தை அழிக்கச் செய்யும் முயற்சியாகவே
படுகிறது. ஆனால் அது இன்னும் நடக்கவில்லை. பிரிட்டிஷ் அரசு முன்பு நம்மை பிரித்தது
போல இன்னொருமுறை நிகழ நாம் அனுமதிக்க கூடாது.
அரசு இதனைத் தடுக்க
என்ன செய்திருக்கவேண்டும்? சகிப்புத்தன்மையற்ற குரல்களை முடக்க எதுமாதிரியான செயல்பாடுகளை
உத்வேகமாக செய்திருக்க முடியும்?
மாட்டிறைச்சி தடை சட்டங்களைத் தாண்டி அரசு ஒரு
நிலைப்பாடு எடுத்திருக்கவேண்டும். ஒரு எடுத்துக்காட்டிற்கு, நான் கூறிய கருத்துக்காக
20 பேர் என்னை கடுமையாக வசைபாடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு என்னிடம் என்ன வேண்டும்
என்று கேட்டால் அது சரியானது.
நான் இன்னும் அடிமை மனோபாவத்திலிருந்து வெளியே
வரவில்லை. பிரிவினையான பிளவுகளை இன்னும் வளர்த்தபடியே இருக்கிறோம். நான் இன்னும் நிறம்
மற்றும் 377 சட்டம் குறித்து கவனம் செலுத்திக்கொண்டு இருக்கிறோம். உண்மையில் முன்பே
அனைத்து மக்களுக்கான உரிமைகள் கொண்ட ஒரு அரசமைப்புச் சட்டம் நம்மிடையே உள்ளது. நான்
இங்கு இந்து மத சட்டம் பற்றி மட்டும் கூறவில்லை. அனைவருக்குமான சட்டம் குறித்து கூறுகிறேன்.
விருதுகளை திருப்பியளிப்பது
என்பது ஒரு குறியீடு போல அமைந்து விழிப்புணர்வை உருவாக்கியுள்ளது. சுதந்திர கருத்தியல்வாதிகள்
இதைத்தாண்டி வேறென்ன செய்திருக்கலாம்?
தாராளவாதிகளுக்கான இடம் என்பது தொடர்ந்து சுருங்கி
வருகிறது. அனைத்துப் புறங்களிலும் அவர்கள் கடுமையாக தாக்கப்படுகிறார்கள். இவை குறித்த விவாதத்தை தொடங்கிய அனைவருக்கும் தலை
வணங்குகிறேன். இதில் மாணவர்களின் பங்கு அதிகம் தேவைப்படுகிறது. இவ்விவகாரம் குறித்து
நாட்டின் பெரும்பான்மையான குடிமகன்களுக்கு ஏதும் தெரியாமல் போய்விட்டது.
நீங்கள் எப்படி இதற்கு எதிராக
போராடுவீர்கள்?
திரைப்பட இயக்குநர்கள் அனைவரும் தயாரித்த கடிதம்
ஒன்றில் நான் கையொப்பமிட்டிருக்கிறேன். என்னுடைய அடுத்த படம் தலித் மக்களின் உரிமைகள்
குறித்து பேசுகிற படமாக உருவாக உள்ளது. நகரத்தில் உள்ள மனிதர்கள் அவர்கள் அறியாத இன்னொரு
இந்தியா இருப்பதை உணராமலும் இருப்பதை அறிந்துள்ளேன்.
சகிப்பின்மையின் மொழிதான்
இன்றைய அரசின் வளர்ச்சித்திட்டங்களை போலித்தனமானது என்று காட்டுவதாக உணர்கிறீர்களா?
நிச்சயமாக.
பிரதமர் என்ன திட்டங்களோடு வந்தாரோ அதனையே இது சிதைத்துவிடுகிறது. அவர் பல இடங்களுக்கு
சென்று சமூகத்தினை திறக்க முயற்சிக்கிறார். ஆனால் நாம் சிந்தனைரீதியாக வளர்ச்சியடையாத
வரையில் அது நடைமுறையில் செயல்படாது. சகிப்பின்மை கொண்ட ஒரு தேசத்தில் உலகம் எப்படி
முதலீடுகளை செய்ய முன்வரும்? உலகம் முழுவதும் இந்தியர்கள் பரவி வாழ்ந்து வருகின்றனர்.
வெளிநாடுகள் தங்கள் நாடுகளின் சட்டங்களை வற்புறுத்து இந்தியர்கள் மீது திணித்தால் எப்படியிருக்கும்?
மாட்டிறைச்சி உண்பதை கட்டாயமாக்கினால் என்ன செய்வது? உங்கள் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களை
செய்யக்கூடாது என்று கூறினால் என்ன செய்வது? எனக்கு சகிப்புத்தன்மை என்ற வார்த்தையே
பிடிக்கவில்லை. தலையீடு ஏற்றுக்கொள்ளுதல் சரியான வார்த்தைகளாக இருக்கும். இவை ஆற்றலைத்
தராதவை.
உலகம் நம்மை கவனித்துக்கொண்டிருக்கிறது.
நாம் ஒன்றாக செயல்பட்டு வருகிறோம். இந்த நிலையில் இந்தியாவிற்கு தேவை என்ன?
நடந்த சம்பவங்கள்
எல்லாம் நமக்குத் தேவையில்லாத ஒன்று. பாலங்களை
கட்டவேண்டிய தருணம் இது. பிளவுகளை குறித்துப் பேசி சமூகத்தை பிளவுபடுத்த அவசியமில்லை.
உணவுத் தடையை இந்தியா முழுவதும் முக்கிய அடிப்படை விஷயம் போல இந்த முறையில்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.
நன்றி: டெக்கான் கிரானிக்கல் , 8 நவம்பர் 2015